தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூரில் சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோயில் அமைந்துள்ளது. தமிழகத்தில் திருநள்ளாறுக்கு அடுத்தபடியாக புகழ்பெற்ற சனி வழிபாடு மற்றும் தோஷ நிவர்த்தி ஸ்தலமாக இந்த சனீஸ்வர பகவான் கோயில் விளங்குகிறது. அவ்வாறு 3000 ஆண்டு பழமை வாய்ந்த புகழ்பெற்ற சுயம்பு குச்சனூர் சனீஸ்வர பகவான் - நீலாதேவி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் பெற்றனர்.
சனீஸ்வர பகவானுக்கு பல்வேறு இடங்களில் திருத்தலங்கள் இருந்தாலும் தேனி மாவட்டத்தில் குச்சனூரில் அமைந்துள்ள குச்சனூர் சனீஸ்வர பகவான் திருத்தலம் சுயம்புவாக உருவாகி சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கோவிலாக கருதப்பட்டு அன்று முதல் பூஜை புனஸ்காரங்கள் செய்து வணங்கி வருகின்றனர்.
ஆடி மாதத்தில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு மூன்றாவது வெள்ளிக்கிழமை சனீஸ்வர பகவானுக்கு திருக்கல்யாணம் விழாவை நடத்தினார்கள். சனீஸ்வர பகவானின் மனைவி நீலாதேவிக்கு உருவம் கிடையாது என்பதால் கும்பத்தில் நீலாதேவி உருவம் அமைத்து அந்த கும்பத்திற்கு சனீஸ்வர பகவான் தாலிகட்டும் நிகழ்ச்சியை நடத்தினார்கள்.
7.5% இடஒதுக்கீடு: மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது - மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவு!
அவ்வாறு அமைக்கப்பட்ட நீலாதேவியின் உருவம் அன்றிலிருந்து சரியாக மூன்றாவது திங்கட்கிழமை அன்று சுரபி நதியில் கரைக்கப்படும். திருக்கல்யாணத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் இருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பெண்கள் வந்து குவிந்துள்ளனர். திருக்கல்யாணத்தில் கலந்துகொள்ளும் பெண்களுக்கு மஞ்சள் கயிறு, வளையல், குங்குமம், மஞ்சள் என்று பிரசாத பொருட்களை வழங்கினார்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்