நெய்வேலியில் நடைபெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள 18 பா.ம.க.,வினரை அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து நலம் விசாரித்து பழங்களை வழங்கினார். பின் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது,"மண்ணுக்கும், மக்களுக்குமாக போராடிய பாமகவை சேர்ந்த 55 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. நெல்வேலி போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட பாமகவினரை விடுவிக்க வேண்டும். என்.எல்.சிக்காக தமிழக அரசு நிலங்களை கையகப்படுத்த கூடாது. என்.எல்.சி நிலங்கரி எடுத்த பின்னர் நிலங்களை அழித்து வருகிறது.
தமிழகத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்படாது என முதல்வர் 3 மாதங்களுக்கு முன் அறிவித்தார். ஆனால் தற்போது 3 போகம் விளையும் விளை நிலங்கள் அழிக்கப்பட்டு வருகின்றது. என்.எல்.சி 3 ஆம் சுரங்கம் அமையுமா? அல்லது அமையாதா? என தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். என்.எல்.சியின் பிரச்சினை தமிழக மக்களின் பிரச்சினை, விளை நிலங்களை தமிழக அரசு பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறியுள்ளது.என்.எல்.சி மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்கிறது. ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் அவதூறு வழக்கில் வழங்கிய தீர்ப்பு குறித்த கேள்விக்கு? ராகுல்காந்திக்கு கிடைத்த தண்டனை மிகப்பெரிய தண்டனை.
சாதாரண வழக்கில் ராகுல்காந்திக்கு தண்டனை வழங்கப்பட்டது. ராகுல்காந்தி வழக்கில் தீர்ப்பு விபரம் தெரியவில்லை தீர்ப்பின் விபரம் கிடைத்தவுடன் முழுமையாக பேசுகிறேன். ராகுல்காந்தி வழக்கும் பாஜகவுக்கும் சம்பந்தமில்லை. டெல்லியில் (தேசிய ஜனநாயக கூட்டணியில்) NDA- கூட்டணியில் பாமக அங்கம் வகிக்கிறது. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக அங்கம் வகிக்கவில்லை. 2026ல் பாமக ஒரு மித்த கருத்துடன் உள்ள கட்சிகளுடன் தேர்தலை சந்திக்கும். அமலாக்கத்துத்துறை சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்” என பேசினார். முன்னதாக சிறைக்குள் செல்லும் பொழுது பாமகவின் பொருளாளர் திலகாமாவை விடாததை கண்டித்து சிறிது போலீசாருடன் பாமகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/ abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Defamation Case: 162 ஆண்டுகால வரலாற்றில் இதுபோன்று தண்டனை வழங்கியதில்லை..ராகுல் காந்தி வழக்கில் சிதம்பரம் கருத்து
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்