தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு மாநில தலைவர் பிஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,  "தமிழகம்-கேரளா இடையே நீண்ட நாட்களாக நீடித்து வரும் முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக்கான போராட்டம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் பேபி அணையை பலப்படுத்துவதற்கு கேரள அரசு அனுமதி மறுத்து வருகிறது. உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மேற்பார்வை குழு அவ்வப்போது ஆய்வு செய்து தரும் ஆலோசனைகளை ஏற்க கேரளம் மறுத்து வருகிறது. 




இதனால் முல்லைப் பெரியாரில் தமிழகத்தின் உரிமை பறிபோகும் பேராபத்து ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக்கான போராட்டங்கள் தமிழகத்தில் தீவிரப்படுத்தினோம். தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மார்ச் மாதத்தை போராட்ட மாதமாக அறிவித்து தேனி திண்டுக்கல் மதுரை ராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் மாவட்டங்களில் மக்கள் மத்தியில் பரப்புரை பயணம் மேற்கொண்டு ஒன்றுபடுத்தி கடந்த மார்ச் மாதம் 15ஆம் தேதி மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை மதுரையில் நடத்தினோம். தொடர்ந்து கடந்த மார்ச் 24ம் தேதி பாரத பிரதமர் அலுவலகத்திலும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.


A.R.Rahman | இந்தி மொழி சர்ச்சை: வைரலாகும் ஏ.ஆர்.ரஹ்மானின் புதிய பதிவு ! - அமித்ஷாவுக்கு பதிலடியா ?




போராட்ட உணர்வுகளுக்கு மதிப்பளித்து அணை பாதுகாப்பு குறித்த உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் இடைக்கால தீர்ப்பு வழங்கியுள்ளது.  அதனடிப்படையில் இன்று உச்சநீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணை மேற்பார்வை குழுவிற்க்கு மூன்று உறுப்பினர்களை கூடுதலாக நியமித்து முழு அதிகாரம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இது தமிழகத்திற்கு சட்டப்படி சாதகமான நிலையை உருவாக்கியுள்ளது. தீர்ப்பின் அடிப்படையில் இனி உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற வேண்டிய முழு பொறுப்பும் மேற்பார்வை குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது. 


எனவே தமிழக அரசு உடனடியாக மேற்பார்வை குழுவை தொடர்பு கொண்டு பேபி அணையை பலப்படுத்துவதற்கான கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். அணைக்கு பொறியாளர்கள் சென்று வருவதை உறுதிப்படுத்த வேண்டும். அதற்கான படகு போக்குவரத்து அனுமதியை பெற்று பணிகளை விரைவுபடுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.  உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பைப் பெற்று கொடுத்திருக்கிற தமிழக அரசின் வழக்கறிஞர் குழுவுக்கு விவசாயிகள் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.


தேனி : உயரம் மாறி மாறி காட்சி தரும் சிவலிங்கம்.. பூலா நந்தீஸ்வரர் கோவிலின் சிறப்புகள்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண