Periyakulam: அகில இந்திய கூடைப்பந்தாட்ட போட்டி; பைனலில் கோப்பையை வென்று அசத்திய இந்தியன் வங்கி அணி

பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 63வது அகில இந்திய கூடைபந்தாட்ட இறுதி போட்டியில் சென்னை இந்தியன் வங்கி அணி வெற்றி பெற்று முதல் பரிசான சுழல் கோப்பையை வென்றனர்.

Continues below advertisement

தேனி மாவட்டம் பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் அமரர் பி.டி சிதம்பர சூரிய நாராயணன் நினைவு சுழற் கோப்பைக்கான  63வது அகில இந்திய கூடைப்பந்தாட்ட போட்டி கடந்த 15ம் தேதி துவங்கியது. இப்போட்டிகள் நாக் அவுட் முறையில் நடைபெற்று அதில் வெற்றி பெற்ற அணிகள் லீக் சுற்றுக்கு தகுதி பெற்று கடந்த இரண்டு நாட்களாக லீக் சுற்று போட்டிகள் நடைபெற்றது. இந்நிலையில் லீக் போட்டிக்கு நான்கு அணிகள் தகுதி பெற்று லீக் போட்டிகள்  நடைபெற்றது. 

Continues below advertisement

Amitshah: ஒடிசாவை தமிழன் ஆள்வதா? டார்கெட் செய்த அமித்ஷா.. பாஜகவை அலறவைக்கும் விகே பாண்டியன்!


இதில் இன்று நடைபெற்ற முதல் போட்டி மூன்று மற்றும் நான்காம் இடத்திற்கான போட்டி நடைபெற்றது. இதில் சென்னை விளையாட்டு விடுதி அணியும் திருவனந்தபுரம் கேரளா மின்வாரிய அணியும் மோதியதில் 78க்கு 56 என்ற புள்ளிகள் அடிப்படையில் சென்னை விளையாட்டு விடுதி அணி வெற்றி பெற்று மூன்றாவது இடத்தையும்,  திருவனந்தபுரம் கேரள மின்வாரிய அணி நான்காம் இடத்தையும் பெற்றது.

இதனைத் தொடர்ந்து முதல் மற்றும் இரண்டாம் இடத்திற்காக நடைபெற்ற இறுதிப்போட்டியில் சென்னை இந்தியன் வங்கி அணியும், சென்னை வருமான வரித்துறை அணியும் மோதியதில் 72 க்கு 68 என்ற புள்ளி அடிப்படையில் சென்னை இந்தியன் வங்கி அணி வெற்றி பெற்று முதலிடத்தை தட்டிச் சென்றது. இரண்டாம் இடத்தை சென்னை வருமானவரித்துறை அணி பெற்றது.

Breaking News LIVE: 30-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறி சாதனை படைத்த நேபாளின் கமி ரிதா


கூடைப்பந்தாட்ட  போட்டியில் வெற்றி பெற்ற சென்னை இந்தியன் வங்கி அணிக்கு முதல் பரிசாக 50, 000 ரூபாய் மற்றும் அமரர் பிடி சிதம்பர சூரிய நாராயணன் நினைவு சுழற் கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தைப் பிடித்த சென்னை வருமான வரித்துறை அணிக்கு பரிசாக 40, 000 ஆயிரம் ரூபாய் மற்றும் சுழற் கோப்பையும், மூன்றாவது இடத்தைப் பிடித்த சென்னை விளையாட்டு விடுதி அணிக்கு பரிசாக 30.000 ரூபாய் மற்றும் சுழற் கோப்பையும்,

நான்காவது இடத்தை பிடித்த திருவனந்தபுரம் கேரள மின்வாரிய அணிக்கு பரிசாக 20, 000 ரூபாய் மற்றும் சுலர் கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. இந்த கூடை பந்தாட்ட போட்டியில் தொடரின் சிறந்த விளையாட்டு வீரராக தேர்வு செய்யப்பட்ட வீரருக்கு  ஹீரோ தேனி அருண் மோட்டார் சார்பாக இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.

Singapore Airlines: 30 பேர் காயம்.. ஒருவர் உயிரிழப்பு..நடுவானில் குலுங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்.. பதறவைத்த காட்சிகள்!


மேலும் கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் அமரர் பிடி சிதம்பரம் சூரிய நாராயணன் நினைவு சுழற் கோப்பை காண 63 ஆவது அகில இந்திய கூடைப்பந்தாட்ட போட்டியை காண தேனி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் ரசிகர்கள் போட்டிகளை கண்டு களித்தனர்.

Continues below advertisement