Breaking News LIVE: ஸ்டிக்கர் ஒட்டுவதை தவறாக பயன்படுத்தினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
யூட்டூபர் இர்ஃபான் தனது மனைவியின் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தினை வெளிநாடு சென்று அறிந்து கொண்டது மட்டும் இல்லாமல், அதனை பொதுவெளியில் தெரிவித்தார். இந்நிலையில் இது பெரும் பிரச்னையாகவே, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகளிடம் யூட்டூபர் இர்ஃபான் நேரில் சென்று மன்னிப்புக் கோரியுள்ளார்.
இரு சக்கர வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதை தவறாக பயன்படுத்தினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள செட்டியாம்பாளையத்தில் கோயில் திருவிழாவில் நடந்த பரண் கிடாய் பூஜையில், ஆட்டை வெட்டி அதன் ரத்தம் குடித்த பூசாரி பழனிசாமி (45) மயங்கி விழுந்து உயிரிழந்தார். சிறுவலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி 1997 ஆண்டு முதன் முதலில் வாங்கிய அம்பாசிடர் கார் பழுதடைந்து இருந்த நிலையில் தற்போது அதனை சரி செய்து மீண்டும் அதனை உள்ளூரில் மட்டும் பயன்படுத்த உள்ளார்.
மக்களவை தேர்தல் பரப்புரை தொடர்பாக பாஜக , காங்கிரஸ் கட்சியினருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பாஜக தலைவர்கள் மதம், சாதி ரீதியிலான பேச்சுக்கள் கூடாது என்றும், காங்கிரஸ் தலைவர்கள் அரசியலமைப்பு ஒழிக்கப்படும் என்ற வகையிலும் பேசக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
எண்ணெய் கசிவு ஏற்படுத்திய குற்றத்திற்காக சிபிசிஎல் நிறுவனத்துக்கு ரூ. கோடி அபராதம் விதித்து தென் மணடல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
காவலர்கள் கட்டணமின்றி பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லை - போக்குவரத்துத்துறை உத்தரவு
🔹வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும்.மற்ற நேரத்தில் காவலர்கள் டிக்கெட் எடுத்து பயணிக்க வேண்டும்
🔹தூத்துக்குடி சென்ற பேருந்தில் காவலர் பயணச் சீட்டு எடுக்க மறுத்து வாக்குவாதம் செய்த நிலையில் போக்குவத்துத்துறை அறிவிப்பு
🔹நாங்குநேரி காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவும் போக்குவரத்துத்துறை பரிந்துரை
விருதுநகர்: சிவகாசியில் ‘ஆம்பள சொக்கா’ என்ற துணி கடையின் திறப்பு விழாவை முன்னிட்டு, முதலில் வரும் 50 நபர்களுக்கு ₹2க்கு ஒரு சட்டை என அறிவித்ததையடுத்து, கடைக்கு முண்டியடித்து ஓடிய இளைஞர்கள் எந்த பொருள் வாங்கினாலும் ஒரு கண்ணாடி இலவசம் எனவும் அறிவித்து இளைஞர்களை ஈர்த்துள்ளனர்
தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திருப்பூர் ஆகிய 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 21 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுகப்பட்டுள்ளது.
நில அபகரிப்பு முறைகேடு தொடர்பான பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் இடைக்கால ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு
ராகுல் காந்தியை புகழ்ந்து செல்லூர் ராஜு எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பதிவை நீக்கினார். நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் என ராகுல் காந்தியை புகழ்ந்து நேற்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பதிவை நீக்கினார் செல்லூர் ராஜு.
செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை மாற்றமின்றி சவரனுக்கு ரூ. 54,880 க்கும், ஒரு கிராம் ரூ. 6,860க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.58,640 ஆகவும், கிராம் ஒன்று ரூ.7,330 ஆகவும் விற்பனையாகிறது.
சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ஒரு கிராம் ஒரு ரூபாய் 30 காசுகள் உயர்ந்து ரூ. 100.30 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதையடுத்து ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 1,30,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
4 நாட்களுக்கு பின் மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை இன்று தொடங்கியது. வழக்கம்போல் காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு மலை ரயில் புறப்பட்டது.
ஒடிசாவில் பிஜ- ஜனதா தளத்தில் இருந்து பாஜகவுக்கு தாவிய 4 எம்.எல்.ஏக்களுக்கு அம்மாநில சட்டப்பேரவை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், 4 எம்.எல்.ஏக்களும் மே 27ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூட்டின் 6 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. பாத்திமா நகரில் வைக்கப்பட்டிருந்த உயிரிழந்தவர்கள் புகைப்படத்துக்கு பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
Background
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (22-ஆம் தேதி வாக்கில்) ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது வடகிழக்கு திசையில் நகர்ந்து, 24- ஆம் தேதி காலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அதன் பிறகு, இது மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -