ஓணம் பண்டிகையை முன்னிட்டு உணவுப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக,கேரள எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.கேரள மாநிலத்தின் பாரம்பரிய திருவிழாவான ஓணம் பண்டிகை வருகிற 29-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையையொட்டி கேரளாவில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டும், காய்கறி, பழங்கள் படைத்தும் வழிபாடு செய்வார்கள். மேலும் உறவினர்கள், நண்பர்களுக்கு உணவு வழங்கி கொண்டாடுவார்கள்.


Chembarambakkam Lake : சென்னை மக்களே ஹேப்பி நியூஸ்.. செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் அதிகரிக்கும் நீர்வரத்து..



இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப்பொருட்கள் கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. குறிப்பாக தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விளையும் காய்கறிகள், பூக்கள் பெரும்பாலும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதுபோல் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்தும் காய்கறிகள் அதிக அளவில் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.தமிழகத்தில் இருந்து பூக்கள், காய்கறிகள் தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக-கேரள எல்லை பகுதிகளான கூடலூரை அடுத்த குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு ஆகிய மலைப்பாதைகள் வழியாக கேரளாவுக்கு லாரி, வேன்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன.


CM Stalin On NTA Exam: இந்தி தேர்வு இதுக்கெல்லாம் கட்டாயமா? மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்




அவ்வாறு கொண்டு செல்லும் வாகனங்களில் ரேசன் அரிசி, கஞ்சா, மதுபானம் கடத்தப்பட வாய்ப்புள்ளதாக புகார்கள் எழுந்தன. இதைத்தொடர்ந்து உணவுப்பொருட்கள் கடத்தலை தடுக்கும் வகையில் தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக,கேரள எல்லை பகுதிகளில் வாகன சோதனை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவிட்டார். அதன்படி, குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு ஆகிய எல்லை பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் தலா ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் வாகனங்களை போலீசார் சோதனை சாவடியில் நிறுத்தி, உணவுப்பொருட்கள் மற்றும் கஞ்சா, மதுபானம் மறைத்து வைத்து கடத்தப்படுகிறதா என்பதை சோதனை செய்து வருகின்றனர்.


Chandrayaan Moon Southpole : நிலவின் தென்துருவத்தை உலக நாடுகள் குறிவைப்பது ஏன்? சந்திரயான் 3 மூலம் இந்தியா சாதிக்க உள்ளது என்ன!?