திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில் தமிழக மாணவர்களின் மருத்துவராகும் கனவைச் சிதைத்து, அவர்களின் உயிரைப் பறிக்கின்ற உயிர்க்கொல்லியாக உருவெடுத்துள்ள நீட் தேர்வைத் திணிக்கும் மத்திய பாஜக அரசு, ஆளுநரை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் ஆகஸ்ட் 20-ம் தேதி உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர்.




அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாணவ, மாணவிகள், அவர்களின் பெற்றோர், கல்வியாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு, நீட் தேர்வுக்கு எதிரான ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் தன்னார்வலர்களும் பொதுமக்களும் தங்களின் கருத்துகளை எடுத்துரைத்தனர். இந்த போராட்டத்தின் பணிகளை இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணிகளின்மாவட்ட அமைப்பாளர், துணைஅமைப்பாளர்கள் ஒருங்கிணைத்தனர். இதேபோல், மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் அறப்போராட்டத்தில் அமைச்சர்கள், துணைப் பொதுச்செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அணிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால் மதுரை மாவட்டத்தில் வலையங்குளம் பகுதியில்  20-ம் தேதி எழுச்சி மாநாடு எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதனால் மதுரை மாவட்டத்தில் 24-ம் தேதிக்கு நீட் தேர்வுக்கு எதிராக மாற்றப்பட்டு இன்று நடைபெற்று வருகிறது.  நீட் தேர்வுக்கு எதிராக மதுரை, அண்ணாநகர் அம்பிகா தியேட்டர் அருகில் மதுரை வடக்கு, மதுரை மாநகர், மதுரை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி - மாணவரணி மருத்துவரணி சார்பில் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் மூர்த்தி, கோ.தளபதி தலைமையில் நடைபெற்றது.  தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் கடந்த 21ம் தேதி தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்திய நிலையில்  மதுரையில் மட்டும் நடைபெறவில்லை. அ.தி.மு.க. மாநாடு நடைபெறும்போது போலீசார் உரிய பாதுகாப்பு வழங்க முடியாத நிலை ஏற்பட்டதாலும், மதுரையில் அன்று போராட்டம் நடைபெறவில்லை. 23ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவித்தது. சந்திராயன் நிலவில் தரை இறங்கிய நிகழ்ச்சியினால் மீண்டும் போராட்ட தேதி மாற்றப்பட்டு இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.




மதுரை அண்ணாநகர், அம்பிகா தியேட்டர் அருகில்  அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கோ.தளபதி, மணி மாறான் தலைமையில் பேராட்டம்  நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில்  நீட்' தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மத்திய பா.ஜ.க. அரசையும், தமிழ்நாடு கவர்னரையும் கண்டித்தும்   தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்து அவர்களின் உயிரை பறிக்கும் நீட் தேர்வை ஒன்றிய பா.ஜ.க அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும், அதிகாரம் இருப்பது போல் மாளிகையில் கொக்கரிக்கும் ஆளுரை கண்டித்தும்". பேசினர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் இளைஞரணி - மாணவரணி மருத்துவரணி நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாநில தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் அனைத்து சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கழக முன்னோடிகள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.


இதைப் படிக்க மிஸ் பஸ் பண்ணாதீங்க பாஸ் - Bahubali Elephant : பொம்மை யானையுடன் சண்டையிட்ட ’பாகுபலி’ யானை ; அச்சமடைந்த வனக்கல்லூரி மாணவர்கள்..