பழனி முருகன் கோயிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து முருகப்பெருமானை வழிபடுகின்றனர். அதேபோல் திருக்கார்த்திகை, கந்தசஷ்டி, நவராத்திரி ஆகிய விழாக்களும் கோயிலில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.


Navratri Festival: இன்று தொடங்குகிறது நவராத்திரி கொண்டாட்டம் - மதுரை மீனாட்சி அம்மன் - திருப்பதி கோயில் சிறப்பு பூஜைகள்


Palani Murugan Temple: பழனி முருகன் கோயிலில் நவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்


நவராத்திரி விழா:


இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கியது. இதையொட்டி பழனி முருகன் கோவிலில், இன்று மதியம் நடைபெறும் உச்சிக்கால பூஜையில், முருகப்பெருமான், துவார பாலகர்கள் உள்ளிட்டோருக்கு காப்பு கட்டப்படுகிறது. இதேபோல் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலிலும் நவராத்திரி விழா தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் மாலை 6 மணிக்கு பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 7 மணிக்கு அலங்காரம் நடைபெறுகிறது.


 



Sri lanka Worldcup 2023: பேரிடி..! உலகக் கோப்பையிலிருந்து விலகினார் இலங்கை கேப்டன் தசுன் ஷனகா - காரணம் இதுதான்..!


தங்கக்குதிரை வாகனம்:


மேலும் கோவில் வளாகத்தில் கொலு வைக்கப்படுகிறது. விழாவின் 9-ம் நாளான 23-ந்தேதி விஜயதசமி அன்று பழனி முருகன் கோவிலில் இருந்து பராசக்திவேல், பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. இதைத்தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் கோதைமங்கலம் சென்று வில்அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் முத்துக்குமாரசுவாமி பெரியநாயகி அம்மன் கோவில் மற்றும் பழனி முருகன் கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நவராத்திரி விழாவையொட்டி இன்று முதல் வருகிற 23-ந்தேதி வரை பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு நடைபெறாது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


காலையில் அதிர்ச்சி! திருவண்ணாமலை அருகே லாரி-கார் மோதி விபத்து.. 7 பேர் உயிரிழப்பு!