திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அந்தனுர் எனும் இடத்தில் புறவழிச் சாலையில் பெங்களூர் நோக்கி திருவண்ணாமலையில் இருந்து சொகுசு கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது காரின் முன்பு சென்ற வாகனத்தை முந்தி செல்ல முற்படும்போது எதிரில் ஊத்தங்கரையில் இருந்து திருவண்ணாமலையை நோக்கி வந்து கொண்டு இருந்த லாரி மீது ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்த சொகுசு கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அருகில் இருந்த பொதுமக்கள் இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அங்கு இருந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்த உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தீயணைப்பு துறையினரும் காரில் ஒரு பெண் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார். அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.


 



 


இந்த விபத்தில் காரில் வந்த எட்டு பேரில் இரண்டு சிறுவர்கள், நான்கு ஆண்கள், ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். இதில் ஏழு பேரின் உடல்கள் மீட்க பட்டு விட்டது. அனைத்து உடல்களும் மீட்கப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்க உட்டஉள்ளனர். தற்போது சொகுசு காரில் பயணம் செய்த 8 பேரில்7 பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த எட்டு பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது. இந்த விபத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


முதற்கட்ட விசாரணையில், மகாளிய அமாவாசையை முன்னிட்டு நேற்று இரவு மேல்மலையனூர் கோவிலில் சாமி தரிசனம் செய்து கர்நாடகாவிற்கு காரில் திரும்பிய போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.


காரில் பயணம் செய்த ஒரு பெண் மட்டும் ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காரில் இருந்த அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு விபத்தில் இருந்தது யார் யார் என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில்  கர்நாடக மாநிலம் டும்கூர் பகுதியை சேர்ந்த சதிஷ்குமார், மணிகண்டன்,ஹெமன்,காவியா, சித்து, சர்வேஸ்வரன் என தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறையினர் தீவர விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.