லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா, அர்ஜுன், கௌதம் மேனன், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், மிஷ்கின் உள்ளிட்டோரின் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் 'லியோ'.

Continues below advertisement

இத்திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் தமிழகத்தில் திரைப்படம் வெளியாவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ”தேனி மாவட்டத்தில் உள்ள தியேட்டர்களில் நடிகர் விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் திரையிட கூடுதலாக ஒரு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தியேட்டர்களில் காலை 9 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1.30 மணிக்குள் இப்படத்தினை திரையிடலாம். வருகிற 19-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை வழக்கமான 4 காட்சிகளுடன் கூடுதலாக ஒரு காட்சி (அதிகபட்சமாக 5 காட்சிகள் மட்டுமே) குறித்த நேரத்திற்குள் மட்டுமே தியேட்டர்கள் செயல்பட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ODI WC 2023: மூன்று போட்டிகளிலும் சேஸ் செய்து கலக்கிய இந்திய அணி! கெத்தாக நடை பயிலும் ரோஹித் படை..!

Continues below advertisement

இந்த நேரம் தவிர மற்ற நேரங்களில் தியேட்டர்களில் இப்படம் திரையிடக்கூடாது. தியேட்டர்களை சுகாதாரமாக பராமரிக்க போதுமான கால இடைவெளியுடன் உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் சிறப்பு காட்சி நடத்தப்பட வேண்டும். தேனி மாவட்டத்தில் உள்ள தியேட்டர்களில் புதிய திரைப்படங்கள் வெளியிடப்படும்போது தமிழ்நாடு திரையரங்கு (ஒழுங்குமுறை) விதிகள் -1957 மற்றும் தமிழ்நாடு கேளிக்கை வரி சட்டம் 1939-ல் உள்ள விதிகளை விட கூடுதலாக வசூல் செய்தால் புகார் செய்யலாம்.  இதுதொடர்பாக சிறப்பு கண்காணிப்பு குழு தலைவர்களை (பெரியகுளம் கோட்டம்) -9445000451, (உத்தமபாளையம் கோட்டம்) 9445000452 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார் செய்யலாம்” என கூறப்பட்டுள்ளது.

Actor Sai Dheena: ‘எந்த ஆட்சி வந்தாலும் தீண்டாமை கொடுமைக்கு தீர்வு கிடையாது’ .. நடிகர் சாய் தீனா ஆவேசம்..!

மேலும், 04546-261093 என்ற தொலைபேசி எண், 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் அந்தந்த பகுதிகளுக்கான தாசில்தார்களை தொடர்பு கொண்டும் புகார் செய்யலாம். சுகாதாரக்குறைபாடு அல்லது கூடுதல் கட்டணம் தொடர்பாக புகார் வந்தால் சம்பந்தப்பட்ட தியேட்டர்கள் மீது தமிழ்நாடு திரையரங்குகள் ஒழுங்குமுறை விதிகள்- 1957-ன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.