2021 -ம் ஆண்டு அரசால் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு இது வரை பனைமரத்தை பாதுகாக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக அரசு விரிவான பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்து மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
பனை மரங்கள் பாதுகாக்க மனு
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த சுப்பையா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பனை மரத்தை நம்பி ஏராளமான பனைத் தொழிலாளர்கள் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் பனங்கருப்பட்டி , பனங்கற்கண்டு போன்ற உணவுப் பொருட்கள் முக்கியமானது. பனையில் இருந்து கிடைக்கும் இந்த பொருட்கள் ஆரோக்கியங்களை வழங்குகிறது.
வெளியூர் செல்லும் பனை பொருட்கள்
பனை சார்ந்த பொருட்கள் தமிழகம் மட்டுமல்லது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றது. உடன்குடி பனங்கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது தற்போது அதிக அளவில் பனை மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றது. தமிழகத்தின் மாநில மரமான பனைமரம் சுற்றுச்சூழல் மற்றும் நீர் நிலைகளை பாதுகாக்க முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது. பனை மரத்தை வெட்டுவதை தடுக்க 2021-ம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. பனை மரத்தை வெட்ட வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று தான் வெட்ட வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டது. அந்த அரசனையை தீவிரமாக நடைமுறைப்படுத்த உத்திராட வேண்டும்” என மனுவில் கூறப்பட்டுள்ளது.
அரசு பதிலளிக்க உத்தரவு
இந்த மனு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது, பனை மரங்கள் பாதுகாக்க 2021 ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 2021 -ம் ஆண்டு அரசால் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு இது வரை பனைமரத்தை பாதுகாக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக அரசு விரிவான பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரையில் வெயிலை தட்டித் தூக்கிய மழை ; மாவட்டம் முழுவதும் 577 மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது !
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - PM Modi: அனைத்து மதங்களும் சமம்; இது அனைவருக்குமான ஆட்சி: பிரதமர் மோடி உருக்கம்!