நாடாளுமன்ற தேர்தல் 2024


இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த ஜூன் 4 -ம் தேதி நடைபெற்றது. இதில் மத்தியில் ஆளும் பா.ஜ.கவுக்கு இம்முறை தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சியமைக்க 272 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்ற நிலையில் பா.ஜ.கவுக்கு 240 மட்டுமே கிடைத்தது. இதனால் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு தொடர்ந்து 3-வது முறையாக மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமையவுள்ளது. இதனிடையே தமிழ்நாட்டில் தனித்து போட்டியிட்ட பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.


ஓ.பி.எஸ்., அறிக்கை


இதனை தொடர்ந்து ஓ.பி.எஸ்., வெளியிட்ட தனது அறிக்கையில்" ஒற்றைக் குச்சியை ஒடிப்பது சுலபமானது. ஆனால் கத்தைக் குச்சியை முறிப்பது கடினம். இனியும் சமாதானம் சொல்லி, தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியமாகும். நமது வெற்றியை நாளை சரித்திரமாக்கிட மனமாட்சியம் மறந்து ஒன்றரைக் கோடி தொண்டர்களும் ஒன்றாகுதல் காண்போம். ஜெயலலிதா உச்சத்தில் அமர்த்திப்போன கட்சியையும், ஆட்சியையும் ஒற்றுமையால் மீட்டெடுக்க தியாகத்திற்கு ஆயத்தமாவோம்." என்று குறிப்பிட்டிருந்தார்.


ஆனால் அ.தி.மு.கவினரை அழைக்க ஓ.பி.எஸ்க்கு உரிமையில்லை என அ.தி.மு.க., துணைப் பொதுச்செயலாளர்  கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார். இந்நிலையில் சிவகங்கை நகர் முழுவதும் ஒன்றுபடுவோம் வென்று காட்டுவோம் என ஓ.பி.எஸ் அணியினர் சுவரொட்டிகள் ஒட்டி, அழைப்பு விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


- KP Munusamy: ”அதிமுகவினரை அழைக்க ஓ பன்னீர்செல்வத்திற்கு எந்த அருகதையும் கிடையாது” - கே.பி முனுசாமி..


ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்


நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க., அணியினர் பெரும் சரிவை கண்டனர். இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா ஆகியோர் அ.தி.மு.க.வினர் ஒன்றுபட வேண்டும் என அழைப்பு விடுத்தனர். இதனை தொடர்ந்து சிவகங்கை மாவட்ட ஓ.பி.எஸ் அணி நிர்வாகிகள் ஒன்றுபடுவோம் வென்று காட்டுவோம் என சிவகங்கை நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டி அழைப்பு விடுத்துள்ளனர். அதில் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் கட்டிக்காத்த இயக்கம் பிரிந்து கிடப்பதால் சரிவை சந்தித்துள்ளதாகவும், இதனால் அ.தி.மு.க., தொண்டர்கள் கண்ணீர் வடிப்பதாகவும் வாசகங்கள் சுவரொட்டியில் எழுதப்பட்டுள்ளன.


இந்த சுவரொட்டியால் அ.தி.மு.க வட்டத்தில்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ் அணியினர் அதிமுகவில் இணைய வாய்ப்புள்ளதாக விமர்சனங்களும் எழுந்துள்ளது.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - TN Weather Update: காலையில் வெயில், மாலையில் கனமழை - மதுரையில் ஏற்படும் ஜில் கிளைமேட் !


மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - BJP in Tamil Nadu: “ஆபரேஷன் சக்ஸஸ், பேஷன்ட் டெட்” சம்பவம்! ஒரு வெற்றிகரமான தோல்வியின் கதை!