TN Weather Update: தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


நாளை ஜூன் 8-ம் தேதி, தமிழகத்தில்  ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். ஜூன் 9, 10 ஆகிய தேதிகளில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மதுரை, மாவட்டம் முழுவதும் 577 மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.


மதுரையில் மழைப் பொழிவு


மதுரை மாவட்டம் பேரையூர் பெரியபட்டி , கள்ளிக்குடி,  மேட்டுப்பட்டி, தல்லாகுளம் மதுரை வடக்கு விமான நிலையம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதிலும் நேற்று ஒட்டுமொத்தமாக 577 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. சராசரியாக 26 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகிய நிலையில் அதிகபட்சமாக பேரையூர் பகுதியில் 67 மி.மீ மழைப் பொழிவும், மேட்டுப்பட்டி பகுதியில் 50 மில்லி மீட்டரும் பெரியபட்டி பகுதியில் 47 மில்லி மீட்டர் கள்ளிக்குடி பகுதியில் 44 மில்லி மீட்டர் மழைப்பொழிவும் குறைந்தபட்சமாக குப்பனம்பட்டி பகுதியில் 3 மில்லி மீட்டர் மழை பொழிவும் பதிவாகியுள்ளது. மதுரை மாநகரை பொருத்தமட்டிலும் தல்லாகுளம் பகுதியில் மற்றும் மதுரை வடக்கு பகுதியில் 42 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. மதுரை விமான நிலையத்தில் 41 மில்லி மீட்டர் மழைப் பொழிவு பதிவாகியுள்ளது.


District  : Madurai
Date   : 07/06/2024


Total No.of Rainguage Stations -- 22.


 District Rainfall in mm - 577.68
Average Rainfall in mm - 26.26


1) Airport Madurai --  41.20
2) Viraganur  -- 26.40
3) Madurai North -42.20
4) Chittampatti -- 25.20
5) Idayapatti   -- 29.00
6) Kallandiri  -- 15.20
7) Tallakulam -- 42.00
8) Melur   -- 9.00
9) Pulipatti --  11.20
10) Thaniyamangalam -- 11.00
11)Sathiyar dam -- 26.00
12)Mettupatti   --- 50.20
13)Andipatti -- 12.40
14)Sholavandhan  -- 15.00
15)Vadipatti  -- 11.00
16)Usilampatti  -- 5.00
17)Kuppanampatti  -- 3.00
18)Kalligudi-- 44.08
19)Tirumangalam  -- 21.60
20)Peraiyur   -- 67.00
21)Elumalai  -- 22.80 
22)Periyapatti -- 47.20


RESERVOIR POSITION


TOTAL FEET    152.00 ft
PERIYAR DAM 118.80 ft
STORAGE         2412 Mcft
INFLOW             201 C/s
DISCHARGE     300  C/s


TOTAL FEET    71.00 ft
VAIGAI DAM    47.80 ft
STORAGE       1718Mcft 
INFLOW             232C/s  
DISCHARGE      69 C/s


TOTAL FEET        29.00 ft
SATHIYAR DAM  09.00 ft
STORAGE            06.41 Mcft 
INFLOW                 01.00 C/s  
DISCHARGE          0 C/s


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Premalatha: “விஜய பிரபாகரன் தோற்கவில்லை; இது சூழ்ச்சி” - பிரேமலதா பகிரங்க குற்றச்சாட்டு


மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Venkatesh Iyer Marriage: கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் வெங்கடேஷ் ஐயர் திருமணம் - யார் இந்த ஸ்ருதி ரகுநாதன்?