மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த ஞானமூர்த்தி மகன் கார்த்திக் ராஜா. இவர் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் மதுரையில் இருந்து கொச்சி ஏர்போர்ட்க்கு சிங்கப்பூர் செல்லும் இரண்டு விமான பயணிகளான ராம்பிரசாத் , வைஷ்ணவ் என்பவர்களை ஏற்றிக்கொண்டு போடிமெட்டு மலைவழி சாலை வழியாக சென்று கொண்டிருந்தபோது, 17ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே திடீரென காரின் முன் பகுதியில் இருந்து புகை வர ஆரம்பித்தது.


NDA meeting: பாஜக கூட்டணி எம்.பிக்கள் இன்று ஆலோசனை - 9ம் தேதி மாலை 5 மணிக்கு மோடி பதவியேற்பு - கிஷன் ரெட்டி




காரை நிறுத்தி ராஜா காரை முன் பகுதியை திறந்து ஆய்வு செய்தபோது குபீர் என்ற தீ பற்றி எரிய துவங்கின. உடனடியாக காரில் உள்புறம் அமர்ந்திருந்த ராம் பிரசாத், வைஷ்ணவ் ஆகியோர் தங்களுடைய பேக் மற்றும் பொருள்களை எடுத்துக்கொண்டு அவசர அவசரமாக காரிலிருந்து வெளியேறினர்.  கார் முற்றிலும் தீப்பிடிக்க துவங்கின இச்சம்பவம் குறித்து கார் டிரைவர் போடி நகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.


Sunapha Yogam: சாமானிய மக்களையும் கோடீஸ்வரனாக்கும் சுனபா யோகம் - எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தெரியுமா?


தகவலின் பேரில் போடி நகர் காவல் துறையினர் குரங்கணி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து உங்கள் சப் டிவிஷன் பகுதியில் போடி மட்டும் மலைச்சாலையில் ஒரு கார் தீப்பெட்டி எறிவதாக தகவல் தெரிவித்தனர். உடனடியாக வரைந்து சென்ற காவல்துறையினர் அங்கிருந்த மண் செடிகளை வைத்து தீயை அணைத்தனர்.


Breaking News LIVE: பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கு - ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்


தீ அணியாமல் எறிய துவங்கவே போடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து  தீயை அணைத்தனர். இதனால் இப்பகுதியில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்படைந்தன. இந்த சம்பவம் குறித்து குரங்கணி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். மேலும் கொச்சி ஏர்போர்ட்டுக்கு செல்லும் இருவரை உடனடியாக மாற்றுப் பேருந்தில்  அனுப்பி வைத்தனர்.