நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை அடுத்த மாதம் டிசம்பர் 25ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பல்வேறு நாடுகளில் தற்போதே கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பொதுமக்கள் தயாராகி வருகின்றனர்.
ஆளுநரிடம் இபிஎஸ் புகார் மனுக்களை அளித்திருப்பது நாடகம்... விளாசிய அமைச்சர் தங்கம் தென்னரசு
குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் 45 நாட்களுக்கு முன்னதாக உலர் பழங்கள் மற்றும் மது வகைகளை கொண்டு கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பது வழக்கம். அதன்படி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நட்சத்திர ஏரி பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் வெளிநாடுகளில் தயாரிப்பது போன்று 80 கிலோவில் பிளம் கேக் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக பாதம், பிஸ்தா, முந்திரி வகைகள், உலர் திராட்சை, கிறிஸ்துமஸ் பழம், அத்திப்பழம் உள்ளிட்ட உலர்ரக 15 வகை பழங்கள் மற்றும் உயர்ரக மதுபானங்கள் அடங்கிய கலவை நேற்று முன்தினம் தயார் செய்யப்பட்டது. இந்த கேக் தயாரிக்கும் பணியில் 13 சமையல் கலைஞர்கள் ஈடுபட்டனர். முன்னதாக கேக் தயாரிக்கும் பணியை விடுதியில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர்.
செயற்கை நீர்வீழ்ச்சிகள் உருவாக்கும் ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்க வேண்டும் - மதுரை உயர்நீதிமன்றம்
தற்போது தயாரிக்கப்பட்ட பழங்கள் மற்றும் மதுபானங்கள் அடங்கிய இந்த கலவையை 30 நாட்கள் பதப்படுத்தி வைத்து, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 2 நாட்களுக்கு முன்பாக மீண்டும் எடுக்கப்படும். அப்போது அந்த கலவையுடன் மாவு சேர்த்து 80 கிலோவில் பிளம் கேக் தயாரிக்க உள்ளதாக சமையல் கலைஞர்கள் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்