திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உலகப்புகழ்பெற்ற மலைகளின் இளவரசி என அழைக்கப்படும், கொடைக்கானலில் வருடந்தோறும் மாவட்ட நிர்வாகம் சார்பாக கோடை விழா நடைபெறும். இந்த விழாவில் தோட்டக்கலைத்துறை சார்பாகவும், சுற்றுலா துறை சார்பாக மலர் கண்காட்சி நடத்தப்படும்.
இந்த நிலையில், தற்போது கோடை விழா துவங்கி மலர் கண்காட்சியுடன் நடைபெற்று வருகிறது. இந்த கோடை விழாவில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக அவர்களின் பார்வைக்காக 20அடி நீள மயில், 10 அடி உயரம் கொண்ட சேவல், 360 டிகிரி செல்ஃபி பாயிண்ட், நெருப்பு கோழி உள்ளிட்ட உருவங்களை பூக்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பூங்காவில் லட்சக்கணக்கான மலர்கள் பல்வேறு வண்ணங்களில் பூத்து குலுங்குகின்றன.
இதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதே போல் இன்று கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் அரசுத்துறை சார்பாக படகு அலங்கார அணிவகுப்பு நடைபெற்றது. இதில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை தோட்டக்கலைத்துறை சுற்றுலாத்துறை மீன்வளத்துறை ஆகிய நான்கு துறைகளில் இருந்து அந்தந்த துறையின் செயல்பாடுகள் குறித்து விளக்கும் விதமாக படகுகள் அலங்காரம் செய்யப்பட்டு அணிவகுப்பு நடைபெற்றது.
Crime: கேஸ் சிலிண்டரில் கசிவு.. தூங்கிக்கொண்டிருந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
இதில் முதல் பரிசை ஊரக வளர்ச்சித் துறை தட்டிச் சென்றது. இரண்டாவது பரிசை மீன்வள துறையும் மூன்றாவது பரிசை சுற்றுலாத் துறையினர் பெற்றனர். அலங்கார அணிவகுப்பை கோட்டாட்சியர் சிவராமன்துவக்கி வைத்தார். இந்நிகழ்வை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
savukku shankar case: போலீஸ் துன்புறுத்தினார்களா..? - நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் சொன்னது என்ன?
இதேபோல் கோடை விழாவின் முக்கிய பங்காக கால்நடை மற்றும் பராமரிப்பு துறை சார்பாக நாய்கள் கண்காட்சி வருடம் தோறும் நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டு 23 ஆவது வருட நாய் கண்காட்சி நடைபெற்றது. இந்த நாய் கண்காட்சியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாய்கள் பங்கேற்றன. குறிப்பாக சிட்சு, ஜெர்மன் ஷெப்பர்ட், ராஜபாளையம், சிப்பிப்பாறை, பக், பொமேரியன், பிட்புள் உள்ளிட்ட பல வகையான நாய்கள் பங்கேற்றன.
மொத்தமாக 13 வகைகளான நாய்கள் இந்த போட்டியில் பங்கேற்றன. 4 சுற்றுகளாக இந்த போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் நாய்களுக்கு பராமரிப்பு மற்றும் நடத்தைகளை பார்த்து பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் பரிசுகள் பெற்ற நாய்களுக்கு கால்நடை மற்றும் பராமரிப்பு துறை அதிகாரிகள் பரிசுகளை வழங்கினார்கள்.