மெட்ராஸ் கெனன் கிளப், சேலம் கெனல் கிளப் மற்றும் கொடைக்கானல் கெனல் அசோசியேஷன் ஆகியவை சார்பில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி, கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 48 வகைகளை சேர்ந்த 286 நாய்கள் கலந்து கொண்டன.


Erode East By-Election Voting LIVE: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 11 மணி நிலவரப்படி 27.89% வாக்குகள் பதிவு.. கள நிலவரங்கள் உடனுக்குடன்...!




அப்போது அந்த நாய்கள், தங்களது உரிமையாளர்களுடன் வந்து பார்வையாளர்களை கவர்ந்தன. கண்காட்சியில் பங்கேற்ற நாய்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. கீழ்ப்படிதல், துப்பறியும் திறன், குணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நாய்களுக்கு போட்டி நடத்தப்பட்டது. பின்னர் போட்டிகளில் வெற்றிபெற்ற நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


Ashwin Warns England: ”அதெல்லாம் இங்க வேலைக்கு ஆகாது” : இங்கிலாந்தை எச்சரிக்கும் அஸ்வின்..


இந்தநிலையில் 2-வது நாளாக நேற்றும் கொடைக்கானலில் நாய்கள் கண்காட்சி நடந்தது. இதில், பல்வேறு உயர்ரக நாய்கள் பங்கேற்றன. மேலும் நாய்களுக்கு பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டன.  தில், மராட்டிய மாநிலம் புனேயில் இருந்து வந்திருந்த கிரேட் டேன் ரக நாயும், மற்றொரு பிரிவில் ஹைதராபாத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட டாபர்மேன் நாயும் முதலிடம் பிடித்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.


IPL 2023: ஐபிஎல்-லிலும் ஆடவில்லையாம்.. மீண்டும் ரசிகர்களை சோதிக்கும் பும்ரா.. என்னதான் ஆச்சு..?


இதேபோல் 2-வது பரிசை ஒடிசாவில் இருந்து வந்திருந்த ஆஸ்திரேலியா ஷெப்பர்ட் வகை நாயும், சென்னையில் இருந்து வந்த ஜெர்மன் ஷெப்பர்ட் ரக நாயும் பிடித்தன. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற நாய்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.


Jacqueline : ஓங்கி கன்னத்தில் அடிக்கணும்போல இருக்கும்..அனுமதியில்லாம தொடுவாங்க.. மனம் திறந்த ஜாக்குலின்


நாய்கள் கண்காட்சியை பொதுமக்கள் மற்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள், மாணவ-மாணவிகள் உள்பட பலரும் பார்வையிட்டு ரசித்தனர். நாய்கள் கண்காட்சி மற்றும் போட்டியில் நடுவர்களாக செர்பியன் நாட்டை சேர்ந்த இஸ்ட்வான், பீட்டர்தெரிக், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஜாய், டெரிக் கிலோரா, மலேசியாவை சேர்ந்த திரிவேதி உள்ளிட்டோர் செயல்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை மெட்ராஸ் கெனன் கிளப்பின் தலைவர் சுதர்சன், செயலாளர் சித்தார்த், கொடைக்கானல் கெனல் அசோசியேஷன் செயலாளர் ஜெய்கேஷ் ஜெயதிலகர் ஆகியோர் செய்திருந்தனர். 2 நாட்கள் நடந்த நாய்கள் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண