Erode East By-Election Voting LIVE: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நிறைவுபெற்றது; 6 மணிக்கு மேல் வாக்களித்ததால் தாமதம்..

Erode East By-election 2023 Voting LIVE Updates: ஈரோடு கிழக்கு தொகுதி  இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

பேச்சி ஆவுடையப்பன் Last Updated: 27 Feb 2023 09:36 PM
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நிறைவுபெற்றது; 6 மணிக்கு மேல் வாக்களித்ததால் தாமதம்..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், மாலை 6 மணிக்கு மேல் வாக்காளர்கள் வாக்களித்ததால் தாமதமாக முடிவடைந்தது.

Erode East By-Election Voting LIVE: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்... 74.69 சதவீத வாக்குப்பதிவு

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில்  6 மணி நிலவரப்படி 74.69 சதவிகித வாக்குப்பதிவு - கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 66 சதவிகிதம் மட்டுமே வாக்குகள் பதிவாகியிருந்தது

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; நிறைவடைந்தது வாக்குப்பதிவு

ஈரோடு கிழக்குத் தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. 6 மணிக்குள் வந்தும் வாக்களிக்காதவர்களுக்க டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 5 மணி நிலவரப்படி 70.58 வாக்குப்பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதியம் 5 மணிவரை 70.58 % வாக்கு பதிவாகியுள்ளது. 

நாகலாந்து - 72.99%, மேகலயா - 63. 91% வாக்குப்பதிவு

இன்று 3 மணிக்குள்ளாக, நாகலாந்தில் - 72.99%, மேகலயாவில் - 63. 91% வாக்கு பதிவாகியுள்ளதாக தேர்தல் அணையம் தெரிவித்துள்ளது. 

  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 3 மணி நிலவரப்படி 59.22% வாக்குப்பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதியம் 3 மணிவரை 59.22 % வாக்கு பதிவாகியுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 1 மணி நிலவரப்படி 44.56% வாக்குப்பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதியம் 1 மணிவரை 44.56% வாக்கு பதிவாகியுள்ளது. 

ஈரோடு கிழக்கு தொகுதியில் ரூ.4000 விநியோகம் - அதிமுக புகார்

ஈரோடு கிழக்கு தொகுதி அன்னை சத்யா நகரில் வாக்காளர்களுக்கு தலா ரூ.4000 விநியோகம் என அதிமுக புகார் அளித்துள்ளார். 

வாக்குப்பதிவு தாமதம் - அதிகாரிகள் ஆய்வு..!

வாக்களிக்க தாமதம் ஏற்படுவதாக எழுந்த புகாரில் கருங்கல் பாளையம் காமராஜ் பள்ளி சாவடியில் காவல்துறை தேர்தல் பார்வையாளர் சுரேஷ்குமார் நேரில் ஆய்வு நடத்தினார். 

11 மணி நிலவரப்படி 27.89% வாக்குகள்.. வாக்கு செலுத்திய ஆண்கள், பெண்கள் விவரம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 32, 562 ஆண்களும், 30. 907 பெண்களும் வாக்களித்தனர். இதையடுத்து மொத்தம் 63,469 பேர் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 11 மணி நிலவரப்படி 27.89% வாக்குகள் பதிவு..!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 27.89% வாக்குகள் பதிவாகியுள்ளது. 

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு.. வாக்குப்பதிவு நிறுத்தம்!

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் உள்ள 45வது வாக்குச்சாவடியில் இயந்திர கோளாறு - வாக்குப்பதிவு நிறுத்தம் என தகவல்  

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா என புகார்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரண்டு வாக்குச்சாவடிகள் அருகே வாக்காளர்களுக்கு பண விநியோகம் என அதிமுக சார்பில் புகார். வாக்குச்சாவடி 138,139ல் பணப்பட்டுவாடா என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்படுகிறது. யார் வென்றாலும் பணநாயகம் வென்றதாக கருதப்படும் - பாஜக

வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்படுகிறது. யார் வென்றாலும் பணநாயகம் வென்றதாக கருதப்படும் - பாஜக

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை - பாஜக எம்.எல்.ஏ சரஸ்வதி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை - பாஜக எம்.எல்.ஏ சரஸ்வதி

மை வைக்க தவறிய அலுவலர்கள்..!

ஈரோடு கல்லுபிள்ளையார் கோயில் வாக்குச்சாவடியில் பெண் வாக்காளருக்கு அலுவலர்கள் மை வைக்க தவறிவிட்டனர். 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. வாக்களித்தார் அதிமுக வேட்பாளர் தென்னரசு!

அதிமுக வேட்பாளர் தென்னரசு கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார்.

22,973 வாக்காளர்கள் வாக்கு செலுத்தியுள்ளனர்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 9 மணி நிலவரப்படி 10.01 % வாக்குப்பதிவு 


22,973 வாக்காளர்கள் வாக்கு செலுத்தியுள்ளனர்

அதிமுக வேட்பாளர் தென்னரசு கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் வாக்களிக்க வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்

ஈரோடு கிழக்குத் தொகுதியில், பெரியார் நகர் வாக்குச்சாவடியில் திமுக, அதிமுகவினர் வாக்குவாதம்

ஈரோடு கிழக்குத் தொகுதியில், பெரியார் நகர் வாக்குச்சாவடியில் திமுக, அதிமுகவினர் வாக்குவாதம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - 10.10% வாக்குப்பதிவு..

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காலை 9 மணி வரை 10.10% வாக்கு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 238 வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

வெற்றிபெற முடியாது என்பதால், எதிர்கட்சியினர் பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறுகின்றனர் - ஈவிகேஎஸ் இளங்கோவன்

வெற்றிபெற முடியாது என்பதால், எதிர்கட்சியினர் பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறுகின்றனர் - ஈவிகேஎஸ் இளங்கோவன்

கல்லுப்பிள்ளையார் கோயில் வாக்குச்சாவடியில் இதுவரை 9% வாக்குப்பதிவு

கருங்கல்பாளையம் கல்லுப்பிள்ளையார் கோயில் வாக்குச்சாவடியில் இதுவரை 9% வாக்குப்பதிவு

ஈரோடு தொகுதி இடைத்தேர்தல்.. வாக்களித்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன்

கச்சேரி வீதியில் உள்ள மாநகராட்சி துவக்கப் பள்ளியில் வாக்களிக்க காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வாக்களித்தார்.

வாக்கு செலுத்துவதை முகவர் பார்த்ததாக புகார்..!

ஈரோடு பெரியண்ணா வீதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்கு செலுத்துவதை முகவர் பார்த்ததாக புகார் எழுந்துள்ளது. சக முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து வாக்குப்பதிவு தெரியாத அளவிற்கு மறைக்கப்பட்டது. 

ஆதார் அட்டை ஏற்க மறுத்த அதிகாரிகள்.. அடுத்தடுத்து எழும் புகார்கள்..!

கச்சேரி வீதியில் உள்ள மாநகராட்சி துவக்க பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த சிவகாமி என்ற வாக்காளரிடம் ஆதார் அட்டை ஏற்க மறுத்ததாக புகார் எழுந்து வருகிறது. 

வாக்கு மை அழிகிறது - அதிமுக புகார்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்கு மை அழிகிறது என அதிமுக புகார் அளித்துள்ளது. 

ஈரோடு இடைத்தேர்தல் - பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

ஈரோடு இடைத்தேர்தல் தொடங்கிய நிலையில் நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் ஆர்வத்துடன்  வாக்களித்து வருகின்றனர்.

அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது : ஈரோடு ஆட்சியர்

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடக்கிறது என ஈரோடு ஆட்சியர் கிருஷ்ணனுன்னி தெரிவித்துள்ளார். 

தேமுதிக வேட்பாளர் ஆனந்த் வாக்களித்தார்..!

தேர்தல் அதிகாரிகளின் அறிவுறுத்தலை தொடர்ந்து கட்சி அடையாளமின்றி வந்து வாக்களித்தார் தேமுதிக வேட்பாளர் ஆனந்த்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்னி வாக்களித்தார்..!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தனது ஜனநாயக கடமையாற்றுவதற்காக ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்னி தனது மனைவி பிரஷீதா உடன் வரிசையில் காத்திருந்து வாக்களிக்க வந்துள்ளார்.

கட்சி துண்டுடன் தேமுதிக வேட்பாளர் வந்ததற்கு எதிர்ப்பு..!

ஈரோட்டில் தேமுதிக வேட்பாளர் ஆனந்த் கட்சி துண்டு, வேட்டியுடன் வந்ததற்கு தேர்தல் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

நாம் தமிழர் வேட்பாளர் மேனகா வாக்களித்தார்..!

ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட கலைமகள் பள்ளியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா வாக்களித்தார். 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வாக்குப்பதிவு தொடக்கம்

ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தமுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 2,27,547 ஆகும்.

Erode East By-Election Voting LIVE: இன்னும் சற்று நேரத்தில்.. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல்!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கப்பட உள்ளது.


முன்னதாக, ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று வருகின்றனர்.

Erode East By-Election Voting LIVE: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - இன்று வாக்குப்பதிவு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

Background

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. 


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்


கடந்த ஜனவரி 4 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா உடல்நலக்குறைவால்  மரணமடைந்தார். இதனால் அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. 


இதனையடுத்து ஜனவரி  31 ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளராக தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனும், அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.,வான தென்னரசுவும், தேமுதிக சார்பில் ஆனந்தும், நாம் தமிழர் சார்பில் மேனகாவும் போட்டியிட்டுள்ளனர். மொத்தம் சுயேட்சை வேட்பாளர்கள் சேர்த்து 77 வேட்பாளர்கள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் களத்தில் உள்ளனர். 


களைக்கட்டிய பிரச்சாரம் 


இதற்கிடையில் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் கடந்த ஒரு மாத காலமாகவே தீவிரமாக நடைபெற்றது. திரும்பும் இடமெல்லாம் அரசியல் கட்சிகள் போட்டிப்போட்டுக் கொண்டு பிரச்சாரம் செய்தனர். வீட்டுக்கு வெள்ளை அடிப்பது தொடங்கி பாத்திரம் கழுவுவது வரை  வித்தியாசமான ஸ்டைலில் கட்சியினர் ஓட்டு சேகரித்து வந்தனர்.


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மநீம தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பிரேமலதா, சுதீஷ், ஜி.கே.வாசன், ஆளுங்கட்சி அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.,க்கள், அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள்,மூத்த நிர்வாகிகள் என பலரும் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தனர். இதனிடையே பிரச்சாரம் நேற்று முன்தினம் (பிப்ரவரி 25) ஓய்ந்தது. இதனைத் தொடர்ந்து அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு வெளிநபர்கள் தொகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 


வாக்குப்பதிவு 


ஈரோடு கிழக்கு தொகுதி  இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மொத்தம் 238 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ள நிலையில், அதனைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளாக அறியப்பட்ட 34 மையங்களில் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இடைத்தேர்தலில் மக்களின் ஆதரவு யாருக்கு என ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும்  ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.