விஜய் டிவியில் 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பிரபலமானவர் ஜாக்குலின். பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்த இவர் சமீப காலமாக எந்த நிகழ்ச்சிகளிலும் பார்க்க முடிவதில்லை. இதனால் மிகுந்த வருத்தத்தில் இருக்கும் அவரின் ரசிகர்கள் அவரிடம் அதற்கான காரணம் குறித்து கேட்டு வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் ஜாக்குலின் பேசிய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 



 


ஜாக்குலின் எங்கே?


தொகுப்பாளராக இருந்த ஜாக்குலின் தனது விடாமுயற்சியால் படிப்படியாக முன்னேறி விஜய் டிவியில் ஒளிபரப்பான தேன்மொழி பி.ஏ சீரியலின் நாயகியாக நடித்திருந்தார். பல எபிசோட்கள் ஒளிபரப்பான இந்த சீரியலில் தொடக்கம் முதல் இறுதி வரை இவரே அந்த லீட் கதாபாத்திரமாக நடித்திருந்தார். இதன் மூலம் அவரின் நடிப்பு திறனும் வெளிப்பட்டது. கோலமாவு கோகிலா உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஏராளமான ரசிகர்களை சேர்த்த ஜாக்குலின் அந்த சீரியல் முடிவடைந்த பிறகு வேறு எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. அதே சமயத்தில் எந்த நிகழ்ச்சிக்கும் தொகுப்பாளராக தொகுத்து வழங்கவும் இல்லை. இதனால் ஜாக்குலின் ரசிகர்கள் அவரை தேடி கண்டுபிடித்து காரணம் கேட்டு வருகிறார்கள். 


அனுமதியின்றி தொட்டு பேசும் பிரபலங்கள் :


தற்போது ஜாக்குலின் ஒரு யூடியூப் சேனல் ஒன்றில் மூலம் அவர் செல்லும் இடங்களை எல்லாம் வீடியோ எடுத்து ப்ளாக் வீடியோவை பகிர்ந்து வருகிறார். இந்த வீடியோ மூலம் அவரின் ரசிகர்கள் தொகுப்பாளராக வராததற்கு காரணம் கேட்டு வருகிறர்கள். அந்த வகையில் சமீபத்தில் ஜாக்குலின் பேசிய வீடியோ ஒன்றில் பல அதிர்ச்சியான தகவல்களை மனம் திறந்து பேசியிருந்தார். தொகுப்பாளராக இருக்கும் சமயங்களில் அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக வரும் ஒரு சில பிரபலங்கள் அத்து மீறி நடந்து கொள்வதாக தெரிவித்தார். பர்மிஷன் இல்லாமல் தொட்டு தொட்டு பேசுவார்கள். இவை அனைத்தும் எனக்கு அருவெறுப்பாக இருக்கும் என கூறியுள்ளார். 


ஒரு சில பெரிய செலிபிரிட்டிகளுடன் போட்டோ எடுக்க வேண்டும் என்றால் கூட அவர்கள் சற்று விலகி நின்று போஸ் கொடுப்பார்கள். ஒரு சிலர் தங்களை தாங்களே பெரிய பிரபலங்கள் என நினைத்து கொண்டு பந்தா காட்டுவதை பார்த்தால் கோபமாக வரும். ஒரு சில சமயங்களில் ஓங்கி கன்னத்தில் அடிக்கலாம் போல இருக்கும். 


ரக்ஷனுடன் காதலா?


பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர் ரக்ஷனுடன் இணைந்துதான் ஜாக்குலின் தொகுத்து வழங்கி வந்தார். அதனால் இவர்கள் இருவருக்கும் இருக்கும் நெருக்கத்தை பார்த்து அவர்களுக்குள் காதல் என வதந்திகள் பரவின. இந்த வதந்திகளுக்கு ஜாக்குலின் தரப்பில் இருந்து ஆமாம் என்றோ அல்லது இல்லை என்றோ என்ற ஒரு விளக்கமும் கொடுக்கப்படவில்லை. இதற்கு ஜாக்குலின் தற்போது பதிலளிக்கையில் ரக்ஷன் எனக்கு மிகவும் நெருங்கிய நல்ல நண்பர். அவர் திருமணமானவர் என்பது எனக்கு முன்கூட்டியே தெரியும். அவர்களின் மனைவி குடும்பத்துடன் நான் இன்றும் டச்சில் இருக்கிறேன். தேவையற்ற வதந்திகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை என்றார்.