நிலக்கோட்டை அருகே முதல்முறையாக தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான கிடா முட்டும் விழா நடைபெற்றது. இதில் திண்டுக்கல், தேனி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, திருச்சி, தஞ்சை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து 106-க்கும் மேற்பட்ட கிடாய்கள் கலந்து கொண்டுள்ளது.
TN Budget 2023 LIVE: தமிழ்நாடு பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த, அம்மையநாயக்கனூரில், இப்பகுதி பாரம்பரிய வீர விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் கிடா வளர்ப்போரின் தீவிர முயற்சியால் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான கிடா முட்டு விழா, உரிய அனுமதியுடன் முதல்முறையாக நடைபெற்றது. இதில், திண்டுக்கல், தேனி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, திருச்சி, தஞ்சை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுமார் 106-க்கும் மேற்பட்ட கிடாய்கள் அதாவது 53 ஜோடி கிடாய்கள் கலந்து கொண்டன.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளான ஜல்லிக்கட்டு, கிடா முட்டும் போட்டி, சேவல் சண்டை என பல்வேறு விளையாட்டுகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் திண்டுக்கல் அம்மையநாயக்கனூரில் நடைபெற்ற கிடா முட்டு விழா, இப்பகுதியில் காவல்துறையினரின் உரிய அனுமதியுடன், வருவாய்துறையினரின் நேரடி பார்வையில், கால்நடைத்துறை மருத்துவ குழுவினரால் கிடாய்களின் உடல் நலம் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கபட்டு நடந்தன.
மின்சாரம் தாக்கி தந்தை, மகன் உயிரிழப்பு!: மாமல்லபுரம் அருகே சோகம்
போட்டியில் 6 மற்றும் 8 கிடாக்கள் என இரண்டு வகைகளாக கிடாய்கள் பிரிக்கப்பட்டு போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படது. ஒருமுறை ஒரு போட்டியில் கலந்து கொள்ளும் கிடா, மீண்டும் அடுத்தடுத்த போட்டியில் கலந்து கொள்ள அனுமதி கிடையாது. வேற போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டுமென்றாலும் கூட குறைந்தபட்சம் 4-மாதங்கள் இடைவெளிக்கு பின்னர், மீண்டும் 20 முதல் 30 நாட்கள் பயிற்சி அளித்த பிறகே அடுத்த போட்டியில் அனுமதிக்கின்றனர்.
இந்த போட்டியில் 60 முட்டுக்கள் தொடர்ந்து முட்டும் கிடாய்கள் வெற்றிபெற்றதாகவும், அதில் சோர்வடைந்து பின்வாங்கும் கிடாய்கள் தோற்றதாக அறிவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். ஆனாலும் 10முட்டுகளிலே பெரும்பாலான கிடாய்கள் பின்வாங்கி போட்டிகள் முடிவுக்கு வருகிறது.
சுட்டெரிக்க தொடங்கிய கோடை… இந்த மாவட்டத்தில் சதம் அடித்த வெயில்!
காலை 9 மணிக்கு துவங்கிய இப்போட்டி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே நடைபெறும். போட்டிகளில் வெற்றி பெறும் கிடாக்களுக்கு, சைக்கல், கட்டில், டேபில்,ஷேர்,கேஸ் அடுப்பு, மிக்சி உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த போட்டியில் ஒரு ஜோடி கிடா ஒரு ரவுண்டு மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்