TN Budget 2023 LIVE: வரும் நிதி ஆண்டில் ரூ.1.43 லட்சம் கோடி கடன் பெற அரசு திட்டம் என பட்ஜெட்டில் தெரிவிப்பு

TN Budget 2023 LIVE Updates: தமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வாசித்து வருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

பேச்சி ஆவுடையப்பன் Last Updated: 20 Mar 2023 01:37 PM
ஏழை மக்களுக்கான நிதிநிலை அறிக்கை - அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையானது, ஏழை மக்களுக்கான நிதிநிலை அறிக்கை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

மதுரையில் மெட்ரோ: மக்களின் சார்பில் முதலமைச்சருக்கு நன்றி- எம்.பி., சு.வெங்கடேசன்

நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல்

நாளை தமிழ்நாட்டின் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது

பட்ஜெட் மீதான விவாதம் மார்ச் 23 முதல் மார்ச் 27 வரை நடைபெறும்- சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

தமிழ்நாடு பட்ஜெட் 23-24 மீதான விவாதம் மார்ச் 23 முதல் மார்ச் 27 வரை நடைபெறும்என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

வரும் ஏப்ரல் 21 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் - சபாநாயகர் அப்பாவு

வரும் ஏப்ரல் மாதம் 21 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

”வரும் நிதி ஆண்டில் 1.43 லட்சம் கோடி கடன் பெற திட்டம்”

வரும் நிதி ஆண்டில் ரூ.1.43 லட்சம் கோடி கடன் பெற திட்டம் என பட்ஜெட்டில் அரசு தெரிவித்துள்ளது.

”வரும் நிதி ஆண்டில் மொத்த செலவு ரூ. 3.08 லட்சம் கோடி”

தமிழ்நாட்டில் வரும் நிதி ஆண்டில் மொத்த செலவு ரூ. 3.08 லட்சம் கோடியாக இருக்கும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”வரும் நிதி ஆண்டில் வருவாய் ரூ. 2.70 லட்சம் கோடியாக இருக்கும்”

தமிழ்நாட்டில் வரும் நிதி ஆண்டில் மொத்த வருவாய் ரூ. 2.70 லட்சம் கோடியாக இருக்கும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.1000 உரிமைத் தொகை: தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு என அந்தர்பல்டி - எடப்பாடி பழனிசாமி


2 மணி நேரம் பட்ஜெட் உரையாற்றிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர், சுமார் 12 மணிக்கு உரையை முடித்தார்.

பத்திரப்பதிவு கட்டணம் 2 சதவிகிதமாக குறைப்பு - நிதியமைச்சர்


உதயநிதி ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் - எடப்பாடி பழனிசாமி

நீட் தேர்வு இன்னும் ரத்தாகவில்லை, நீட் ரகசியம் என்பது சட்டப்போராட்டம் என கூறிய உதயநிதிக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

வரி உயர்வுதான் திமுக அரசு தந்த பரிசு - எடப்பாடி பழனிசாமி

வரி உயர்வுதான் திமுக அரசு தந்த பரிசு என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு மேலான புதிய திட்டங்கள் - நிதியமைச்சர்

2021 மே மாதம் 7 ஆம் தேதி ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து ரூ.1 லட்சம் கோடிக்கு மேலான புதிய திட்டங்களை அரசு அறிவித்துள்ளது என நிதியமைச்சர் தெரிவித்தார்

செப்.15 முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை அறிவிப்பு

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை திட்டம், செப்டம்பர் 15 ஆம் தேதி அறிஞர் அண்ணா பிறந்தநாளன்று தொடங்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்தார்

Tamil Nadu Budget 2023 LIVE: போக்குவரத்துத்துறைக்கு 8,056 கோடி ஒதுக்கீடு; பட்ஜெட்டில் அறிவிப்பு


TN Budget 2023 LIVE: ”7 மாநகராட்சியில் இலவச wifi வசதி”

சென்னை, தாம்பரம், ஆவடி,கோவை,மதுரை, திருச்சி,சேலம் ஆகிய 7 மாநகராட்சிகளின் முக்கிய இடங்களில் இலவச வை-ஃபை வசதி ஏற்படுத்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Budget 2023 LIVE: ”ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சியில் புதிய தொழிற்சாலை”

ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சியில் தோல்பொருள் தொழிற்சாலை அமைக்கப்படும். இதனால் 32, 000 பெண்களுக்கு வேலைவாப்பு கிடைக்கும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது

”மதுரையில் ரூ.8,500 கோடியில் மெட்ரோ ரயில்”

மதுரையில் ரூ.8,500 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"கோவையில் ரூ.9000 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம்”

கோவையில் ரூ.9000 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Budget 2023 LIVE: ”சென்னை தீவுத்திடலில் திறந்தவெளி திரையரங்கம்”

சென்னை தீவுத்திடலில் திறந்தவெளி திரையரங்கம் உள்ளிட்ட திட்டங்கள் மேம்படுத்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கழிவறை : ரூ. 430 கோடி ஒதுக்கீடு

சென்னையில் கழிவறை கட்டவும் மேம்படுத்தவும் ரூ. 430 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Budget 2023 LIVE: ”கோவையில் ரூ.172 கோடியில் செம்மொழி பூங்கா”

கோவையில் ரூ. 172 கோடியில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது

”அடையாறு ஆற்றை தூய்மைப்படுத்தி கரையோர பொழுதுபோக்கு பூங்கா”

அடையாறு ஆற்றை தூய்மைப்படுத்தி கரையோர பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்

ஈரோட்டில் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்படும் - நிதியமைச்சர்

ஈரோட்டில், 80 ஆயிரம் ஹெக்டேரில் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார். இது தமிழ்நாட்டின் 18வது சரணாலயமாகும் 

”தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுபப்டுத்தும் மையத்துக்கு நிதி”

தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுபப்டுத்தும் மையத்துக்கு நிதி ஒதுக்கப்படுவதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

உயர்கல்வியில் சேரும் அரசு பள்ளி மாணவிகளின் எண்ணிக்கை 29 சதவீதம் அதிகரிப்பு - நிதியமைச்சர்

உயர்கல்வியில் சேரும் அரசு பள்ளி மாணவிகளின் எண்ணிக்கை 29 சதவீதம் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.

சென்னையில் சர்வதேச தரத்திலான புதிய விளையாட்டு மையம் அமைக்கப்படும் - நிதியமைச்சர்

சர்வதேச தரத்திலான உலகளாவிய விளையாட்டு மையம் CMDA மூலம் சென்னையில் அமைக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்தார்.

”மாணவர்களுக்கு மிதிவண்டி - ரூ. 305 கோடி நிதி ஒதுக்கீடு”

மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்குவதற்காக ரூ. 305 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார்.

TN Budget 2023 LIVE: ”உயிர் தியாகம் செய்த ராணுவத்தினரின் குடும்பத்துக்கு 40 லட்சம் உதவி”

நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் போது உயிர் தியாகம் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த படைவீரர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் கருணைத்தொகை 20 லட்சம் ரூபாயில் இருந்து, இருமடங்காக உயர்த்தி 40 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.



”ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வர்களுக்கு 10 கோடி நிதி உதவி”

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் குடிமைப் பணி தேர்வுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 மாணவர்களுக்கு முதல் நிலைத் தேர்வுக்கு தயாராக மாதம் ரூ.7,500 முதன்மைத் தேர்வுக்கு ரூ.25,000 உதவித்தொகை ஆண்டுக்கு 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதியமைச்சர் அறிவித்தார்.

பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 40, 299 கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர்

பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 40, 299 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார்

Tamil Nadu Budget 2023 LIVE: கலைஞர் நூலகம் ஜூனில் திறப்பு - நிதியமைச்சர்

மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகம் ஜூனில் திறக்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார்

அனைத்து பள்ளிகளும் பள்ளி கல்வித்துறையின் கீழ் கொண்டுவரப்படும் - நிதியமைச்சர்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் பள்ளிகள் மற்றும் இந்து சமய மற்றும் அறநிலையத்துறை, வனத்துறை போன்ற பல்வேறு துறைகளில் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும் பள்ளி கல்வித்துறையின் கீழ் கொண்டுவரப்படும்

TN Budget 2023 LIVE: மருத்துவத்துறைக்கு 18,661 கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர்

2023-24ஆம் ஆண்டுக்கான் பட்ஜெட்டில், மருத்துவத்துறைக்கு 18,661 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகாரஜன் அறிவித்தார்.

”மாநில அரசின் வரி வருவாய் 6.11 சதவீதமாக அதிகரித்துள்ளது”

மாநில அரசின் வரி வருவாய் 6.11 சதவீதமாக அதிகரித்துள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார்

இலங்கைத் தமிழர்களுக்கு 3,959 வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு- நிதியமைச்சர்

இலங்கை தமிழர்களுக்கு 3,959 வீடுகள் கட்ட 233 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது நிதியமைச்சர் தெரிவித்தார்.

சோழ பேரரசு புகழை அறிய அருங்காட்சியகம் - நிதியமைச்சர்

சோழ பேரரசு புகழை அறிய தஞ்சை மாவட்டத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என நிதியமைச்சர்  தெரிவித்தார்.

”மொழிப்போர் தியாகிகளுக்கு நினைவிடம்”

மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராசனுக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார்.

வருவாய் பற்றாக்குறையை 30 ஆயிரம் கோடியை குறைத்துள்ளோம்- நிதியமைச்சர்

வருவாய் பற்றாக்குறையை 30 ஆயிரம் கோடியாக குறைத்துள்ளோம், வரும் ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறை மேலும் குறையும் வாய்ப்புள்ளது எனவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். 

அம்பேத்கரின் படைப்புகள் தமிழில் மொழி பெயர்க்கப்படும்- நிதியமைச்சர்

அம்பேத்கரின் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படும், தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு நடத்தப்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார்

மத்திய அரசை விட பற்றாக்குறையை குறைத்துள்ளோம் - நிதியமைச்சர்

கடந்த ஆண்டில், மத்திய அரசை விட பற்றாக்குறையை குறைத்துள்ளோம் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதிமுக உறுப்பினர்கள் அமளி

நிதியமைச்சர் பட்ஜெட் வாசிக்கையில் அதிமுக உறுப்பினர்கள் பேரவையில் அமளி செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தமிழ்நாடு பட்ஜெட்டை ( 2023- 24 ) தாக்கல் செய்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.


 

சற்று நேரத்தில் தமிழ்நாடு பட்ஜெட் 2023-24 தாக்கல்

சற்று நேரத்தில் ( 10 மணிக்கு ), தமிழ்நாடு பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

சட்டப்பேரவைக்கு வந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க, சட்டப்பேரவைக்கு வந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

அதிமுக எம்.எல்.ஏ-க்களுடன் எதிர்க்கட்சித்தலைவர் ஆலோசனை

தமிழ்நாடு சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சி அறையில், அதிமுக எம்.எல்.ஏ-க்களுடன் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசானி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்

தமிழ்நாட்டின் கடன் ரூ.6.53 லட்சம் கோடி

2022-23 பட்ஜெட் மதிப்பீடுகள் அடிப்படையில் தமிழ்நாட்டின் கடன் ரூ.6.53 லட்சம் கோடியாக உள்ளது.

நிதி பற்றாக்குறை ரூ.90,114 கோடி

2022-23 பட்ஜெட் மதிப்பீடுகள் அடிப்படையில் தமிழ்நாட்டின் நிதி பற்றாக்குறை ரூ.90,114 கோடியாக உள்ளது.

தமிழ்நாட்டின் கடன் ரூ.3.33 லட்சம் கோடி

2022-23 பட்ஜெட் மதிப்பீடுகள் அடிப்படையில் தமிழ்நாட்டின் கடன் ரூ.3.33 லட்சம் கோடியாக உள்ளது.

தமிழ்நாட்டின் வரவு ரூ.2.37லட்சம் கோடி

2022-23 பட்ஜெட் மதிப்பீடுகள் அடிப்படையில் தமிழ்நாட்டின் வரவு ரூ.2.37லட்சம் கோடியாக உள்ளது.

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பு ரூ.24.84 லட்சம் கோடி

2022-23 பட்ஜெட் மதிப்பீடுகள் அடிப்படையில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பு ரூ.24.84 லட்சம் கோடியாக உள்ளது

ஓபிஎஸ் - இபிஎஸ் அருகருகே அமர்வார்களா?

எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை ஓபிஎஸ்-க்கு ஒதுக்கப்படுமா என்பது சட்டப்பேரவை கூடும்போது தெரியவரும்

திமுக அரசு தாக்கல் செய்யும் மூன்றாவது பட்ஜெட்

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, 2021 ஆம் ஆண்டு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2022 ஆம் ஆண்டு முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.  மூன்றாவது முறையாக இன்று, இரண்டாவது முழுமுதல் பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.  

பட்ஜெட் மீதான விவாதம் எத்தனை நாட்கள் நடைபெறும்?

பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு, எத்தனை நாட்கள் விவாதங்கள் நடைபெறும் என்பது குறித்து பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும்.

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள விளையாட்டு தடை மசோதா மீண்டும் தாக்கல்?

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள விளையாட்டுக்களை தடை செய்வதற்கான மசோதாவை, ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் மீண்டும் தாக்கல் செய்ய திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை அறிவிப்பு?

2023-24 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டில், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

TN Budget 2023 LIVE: இன்று காலை 10 மணிக்கு தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல்

மின்னணு வடிவிலான தமிழ்நாடு அரசின் 2023-24 ஆம் ஆண்டின் பட்ஜெட்டை  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார். 

TN Budget 2023 LIVE: பட்ஜெட்டில் தேர்தல் வாக்குறுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு 


 இன்று தாக்கல் செய்யப்படும் தமிழக அரசின் பட்ஜெட்டில் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்த அறிவிப்பு   வெளியாக வாய்ப்பு - அதேபோல் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மற்றும் புதிய திட்டங்கள் ஆகியவற்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படலாம்  

Background

TN Budget 2023 LIVE


தமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார். வழக்கத்திற்கு மாறாக இந்த பட்ஜெட்டுக்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.


குடும்ப தலைவிகளுக்கான உரிமைத் தொகை திட்டம்:


குடும்ப தலைவிகளுக்கான 1000 ரூபாய் உரிமைத் தொகை திட்டம் குறித்த அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் வெளியிடப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தது தான், பொதுமக்களிடையே பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு இந்த அளவிற்கு அதிகரிக்க காரணமாக உள்ளது. திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது.  


திமுக ஆட்சிக்கு வந்து சுமார் இரண்டு வருடங்கள் ஆகும் நிலையில், அதற்கான அறிவிப்பு வரவில்லை. இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சனங்கள் செய்து வந்தனர். இதற்கு மத்தியில், ஈரோடு இடைத்தேர்தல் பரப்புரையில்  பேசிய  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கத் தொடங்குவதற்கான தேதி குறித்த அறிவிப்பு பட்ஜெட் தாக்கலில் இடம்பெறும்” என்று உறுதியளித்தார். 


இதையடுத்து, உரிமை தொகை தொடர்பான அறிவிப்பு மட்டும் இன்றி, பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இதில் வெளியாக உள்ளன. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்ற விவரமும் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் இடம் பெற்றிருக்கும். மேலும், இந்த பட்ஜெட்டில் துறை சார்ந்த சில முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகள்:


அதில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கான திட்டம், காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பினரின் கோரிக்கைகள் தொடர்பான முக்கிய அறிவிப்புகளையும் பட்ஜெட்டில் அரசு  வெளியிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, நெல் கொள்முதல் விலை, மின்சார கட்டணம், புதிய பாடத்திட்டம், கேஸ் மானியம் என பல்வேறு எதிர்பார்ப்புகளும் பொதுமக்களிடையே நிலவுகிறது.


சுமார் 2 மணி நேரத்திற்கு, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த பட்ஜெட் உரையை வாசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பிறகு சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற உள்ளது..


வேளாண் பட்ஜெட்:


இந்த கூட்டத்தில் சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும். அதில் என்னென்ன அலுவல்களை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்படும். சட்டப்பேரவையில் இன்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை தொடர்ந்து, நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. 


சுமார் 4 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. திமுக அரசை எதிர்த்தும், தமிழகத்தில் நிலவும் சட்ட-ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்ப  எதிர்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். நிறைவு நாளில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கை தொடர்பாக விரிவாக பதில் அளிப்பார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.