கேரள மாநிலம் மைநாகப்பள்ளி பகுதியில் கார் விபத்தில் சிக்கிய அஜ்மல் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அஜ்மலும், அவருடன் இருந்த டாக்டர் ஸ்ரீகுட்டியும் குடிபோதையில் இருந்ததாக மருத்துவ பரிசோதனை முடிவு போலீசாருக்கு கிடைத்தது. 

Purattasi 2024: பக்தர்களே! புரட்டாசி மாதம் ஏன் பெருமாளுக்கு மிகவும் உகந்தது? இதுதான் காரணம்

நேற்று மாலை மைநாகப்பள்ளியை சேர்ந்த குஞ்சுமோள் என்பவரும் அவரது உறவினர் பௌசியாவும் இரு சக்கர வாகனத்தில் சாலையை கடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னே வந்த கார் தாறுமாறாக ஓடி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இருவர் மீதும் மோதியது. இந்த விபத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதைக் கண்டு காரை ஓட்டி வந்த அஜ்மல் என்பவரும் அவருடன் இருந்த  ஸ்ரீகுட்டியும் குஞ்சுமோள் உடல் மீது ஏற்றி காரை ஓட்டிக்கொண்டு தப்பினர். பலத்த காயம் அடைந்த குஞ்சுமோள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்தார்.

Breaking News LIVE: கும்மிடிப்பூண்டி தடைகளை உடைத்து பட்டியலின மக்கள் ஆலய பிரவேசம்..

 

பௌசியா சிகிச்சை பெற்று வருகிறார். அக்கம் பக்கத்தினர் பின்தொடர்ந்து ஓடியபோது அஜ்மல் காரை நிறுத்தினார். இந்த நிலையில் போலீசார் விசாரணையில் விபத்து ஏற்படுத்திய அஜ்மல் என்பவர் மருத்துவர் எனவும் அவரை கண்டறிந்து அவரது வீட்டிற்கு சென்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அஜ்மல் குடிபோதையில் இருந்ததாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் போதைப்பொருள் வழக்கில் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். இது குறித்து விபத்தை பார்த்தவர்கள் போலீசாரிடம் கூறுகையில், விபத்தின்போது பெண் வாகனத்தின் அடியில் கிடப்பதாகக் கூப்பிட்டதையும் மீறி சம்பவ இடத்திற்கு விரைந்த அக்கம்பக்கத்தினர் வாகனத்தை நிறுத்தக்கூறிய நிலையில் அவர்கள் மத்தியில் அஜ்மல் வாகனத்தை முன்னோக்கி எடுத்துச் சென்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

Chess Olympiad 2024:"எங்க வந்து யாருகிட்ட".. செஸ் ஒலிம்பியாட்! 5வது சுற்றிலும் இந்தியா ஆதிக்கம்! மிரளும் வீரர்கள்

மேலும் வாகனம் வேகமாகச் சென்று 300 மீட்டர் தொலைவில் மற்றொரு வாகனத்தில் மோத முயன்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் முன்னால் சென்ற இரு வாகனங்கள் மீது மோதியது. வாகனம் கருநாகப்பள்ளியில் மின்கம்பத்தில் மோதி நின்றதும், காரில் இருந்தவர்கள் தப்பித்தனர் என்று பல்வேறு கட்ட தகவல்கள் அடிப்படையிலும் கார் விபத்துக்குள்ளான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விபத்து குறித்து குற்றவாளிகளை கைது செய்தனர்.