Breaking News LIVE: கும்மிடிப்பூண்டி தடைகளை உடைத்து பட்டியலின மக்கள் ஆலய பிரவேசம்..
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காணலாம்.
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் தேங்கிய கரையாத சிலைகள், குப்பைகள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள்
நிர்வாகச் சிக்கலை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என விசிக தலைவர் திருமாவளவனிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கும் ‘வேட்டையன்’ திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் வரும் 20ம் தேதி நடைபெற உள்ளதாக படக்குழு தகவல்!
பரபரப்பான அரசியல் சூழலில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை அறிவாலயம் சென்று சந்தித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.
அக்டோபர் 2ல் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவிற்கு அழைப்பு விடுத்த நிலையில் திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
சந்திப்புக்கு பிறகு வெளியே வந்து பத்திரிகையாளர்களை சந்தித்து முதல்வருடன் என்ன பேசினார் என்பதை திருமாவளவன் தெரிவிக்கவுள்ளார்.
கும்மிடிப்பூண்டி வழுதலம்பேட்டில், உள்ள எட்டியம்மன் கோயிலில், மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில், உள்ளே சென்று பட்டியல் இன மக்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். மாவட்ட எஸ்.பி தலைமையில், 200 போலீசார் பாதுகாப்பு அளித்தனர்
கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோளில் 6.5ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கவில்லை.
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் மும்பையில் உள்ள லால்பாக்சா ராஜாவை தரிசனம் செய்யவும், விநாயகப் பெருமானை வழிபடவும் சென்றுள்ளார்.
புதுச்சேரியில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் சிறையில் தற்கொலை செய்து கொண்டார் என தகவல் வெளியாகியுள்ளது. 9 வயது சிறுமி பாலையல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் விவேகானந்தன், கருணாஸ் ஆகியோர் கைதாகினர். இதில் கைதி விவேகானந்தன் சிறை கழிவறையில் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
விசிக தலைவர் திருமாவளவன் பொதுநல நோக்கத்தோடு மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறோம் என்று சொல்லியிருக்கிறார். இது வரவேற்கத்தக்கது. அதிமுக மிகப்பெரிய இயக்கம். வரைமுறை இருக்கிறது. இபிஎஸ்சை நேரில் சந்தித்து திருமாவளவன் அழைப்பு விடுத்தால் எடப்பாடி முடிவு செய்வார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் இன்று மதியம் ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடியின் 3 நாட்கள் சுற்றுப்பயணம் நேற்று தொடங்கியது. ஜார்க்கண்ட், குஜராத், ஒடிசாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூர் நகரில் நடைபெற்ற திட்டமிடப்பட்டு இருந்த வாகன பேரணி ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், குஜராத்தில் இன்று மதியம் நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மது ஒழிப்பு மாநாடு சர்ச்சை, ஆட்சி அதிகாரத்தில் பங்கு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் காரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்திக்கிறார் திருமாவளவன்
Background
- நாடு முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் 638 ரயில் விபத்துக்கள் – 748 மரணங்கள்; ஆர்.டி.ஐ. அளித்த அதிர்ச்சித் தகவல்
- ஹரியானா சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு நெருக்கடி – உட்கட்சி மோதலால் சிக்கல்
- மருத்துவக் காப்பீட்டிற்கான ஜி.எஸ்.டி.யை மறு ஆய்வு செய்ய குழு அமைத்தது ஜி.எஸ்.டி. கவுன்சில்
- லஞ்ச ஒழிப்புத்துறைக்கு காபித்தூளுடன் மனு அளித்த அறப்போர் இயக்கம்
- மது ஒழிப்பு மாநாட்டை பெரிதுபடுத்தி கூட்டணியை உடைக்க பார்க்கின்றனர் – திருமாவளவன் குற்றச்சாட்டு
- ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கும் திருமாவளவனுடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை – டி.கே.எஸ்.இளங்கோவன்
- குடிக்கு அடிமையாக இருக்கும் வன்னியர்களையும், பட்டியலின இளைஞர்களையும் மீட்க வேண்டும் – அன்புமணி பேச்சு
- அடுத்தடுத்து சர்ச்சைகள்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்திக்கிறார் திருமாவளவன்
- பெரியார் பிறந்த நாள்; சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்க தி.மு.க. உத்தரவு
- டெல்லியில் அடுத்த முதலமைச்சர் யார்? ஆம் ஆத்மியில் பெரும் பரபரப்பு
- முத்ரா கடன் குறித்து நிர்மலா சீதாராமன் தவறான தகவல்களை அளித்துள்ளார் – தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு
- கேரளாவில் 5 பேருக்கு நிஃபா வைரஸ் தொற்று
- விசாகப்பட்டினத்தில் நடுக்கடலில் தீப்பற்றி எரிந்தததால் பரபரப்பு
- மணிப்பூரில் இணைய சேவை தடை 20ம் தேதி வரை நீட்டிப்பு – மணிப்பூர் அரசு நடவடிக்கை
- நீர்நிலைகளில் கட்டுமானங்கள் கட்டுவதை தடுக்க 3 கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு
- புதுச்சேரியில் மின் கட்டண உயர்வு; அ.தி.மு.க. இன்று ஆர்ப்பாட்டம்
- நடிகை காதாம்பரி கைது; 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் சஸ்பெண்ட் – ஆந்திராவில் அதிரடி
- தமிழ்நாட்டில் இரு வேறு இடங்களில் நீரில் மூழ்கி 5 பேர் மரணம்
- டெல்லியில் போலி விசா தயாரித்த 6 பேர் கைது – ஒரு விசாவிற்கு 10 லட்சம் வரை வசூல்
- இஸ்ரேலில் வேலை பார்ப்பதற்கு இன்று புனேவில் ஆட்சேர்ப்பு முகாம்
- யாகி புயலால் பாதிக்கப்பட்ட வியட்நாமிற்கு இந்தியா நிவாரண உதவி
- இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ஹவுதி
- டொனால்ட் டிரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச்சுடுதல் தாக்குதல் முயற்சி
- - - - - - - - - Advertisement - - - - - - - - -