கோவையில் நடந்த ஜிஎஸ்டி கூட்ட விவகாரம் தொடர்பாக அன்னபூர்ணா ஸ்ரீனிவாசனை மன்னிப்பு கேட்க வைப்பது தமிழனின் தன்மானத்திற்கு உடன்படாது என முன்னாள் அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தேனியில் பேட்டியளித்தார்.
தேனி அருகே வடபுதுபட்டியில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களின் முப்பெரும் விழா நடந்தது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், “ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நான் உறுப்பினராக இருந்துள்ளேன். அதில் வரி குறைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அதை மாநில அரசுதான் முன்னெடுக்க வேண்டும்.
"வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதில் அரசு உறுதிபூண்டுள்ளது" பிரதமர் மோடி பேச்சு!
கோவையில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அன்னபூர்ணா சீனிவாசன் வரி குறைக்க வேண்டும் என வைத்த கோரிக்கை சரியானது. அதற்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் முறையாக சொல்லி இருக்கலாம் அல்லது அவருக்கு புரியும்படி எளிமையாக சொல்லி இருக்கலாம். ஆனால் அவரை மன்னிப்பு கேட்க வைப்பது தமிழனின் தன்மானத்திற்கு உடன்படாது. ஒரு தொழில் முனைவரின் தன்மானத்திற்கு உடன் படாதது” என்றார்.
மேலும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் கட்டமைக்கப்பட்ட ஜிஎஸ்டி கூட்டத்திற்கு தேவையற்ற விவாதத்தால் கெட்ட பெயர் ஏற்படுகிறது என்று வருத்தம் எனக்கு உள்ளது. தொழில் முனைவராக அவருக்கு உரிய மரியாதையை கொடுத்திருக்க வேண்டும் என்பது எனது கருத்து எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், விசிக மது ஒழிப்பு மாநாடு வரவேற்கத்தக்க விஷயம். இதனை அரசியல் கடந்து அனைத்துக் கட்சிகளும் பார்க்க வேண்டும்.
அலர்ட் மக்களே ! விழுப்புரம் மாவட்டத்தில் நாளை மின் தடை... எந்தெந்த பகுதிகள் தெரியுமா ?
எங்கள் ஆட்சியில் அதிக போதை பொருள் விற்பனை, உங்கள் ஆட்சியில் அதிக போதைப்பொருள் விற்பனை என போட்டி போட்டுக் கொள்ளாமல் அதனை கட்டுப்படுத்த முதலமைச்சர் முன்வர வேண்டும். திருமாவளவன் முன்னெடுக்கும் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது. அதில் அதிமுக பங்கேற்குமா பங்கேற்காதா? என்பது தலைமை முடிவு செய்யும் தமிழகத்தை பாதுகாக்க கூடிய ஒரு முயற்சி இது வரவேற்கத்தக்கது என தெரிவித்தார்.