கேரள மாநிலத்தை பொறுத்தவரையில் ஒவ்வொரு பருவமழை சீசனிலும் அதிகமான மழை பொழிவு என்பது வருடத்திற்கு வருடம் அதிகரித்தே வருவதாக அம்மாநில வானிலை மையம் தெரிவித்து வருகிறது. அதே வேளையில் ஒவ்வொரு வருடமும் இயற்கை சீற்றங்களால் கேரள மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பெரும் உயிர்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டு வருவதையும் பார்க்க முடிகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஏற்பட்ட வயநாடு நிலச்சரிவு சம்பவம் நாட்டையே உலுக்கியது. சுமார் 300க்கும் மேற்பட்ட மரணங்களும் ஏராளமான பொருட் சேதமும் ஏற்பட்ட சம்பவம் பல்வேறு தரப்பினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Kamalhassan Not In Bigboss : பிக்பாஸ் தொகுத்து வழங்க முடியாது.. ஷாக் கொடுத்த கமல்.. என்னாச்சு..?




இந்த நிலையில் தற்போது இந்தாண்டு இடுக்கி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை குறைந்த நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகையும் வெகுவாக குறைந்ததுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவ மழை ஆண்டு தோறும் ஜூனில்  துவங்கி செப்டம்பர் இறுதி வரை நீடிக்கும். இந்தாண்டு வழக்கத்தை விட முன் கூட்டியே மே 30ல் துவங்கியது. இடுக்கி மாவட்டத்தில் பருவ மழை துவங்கியவுடன் ஒரு சில நாட்கள் பலத்த மழை பெய்தது. அதன்பிறகு மழை குறைந்த நிலையில் ஜூன் இறுதியில் மழை வலுவடைந்தது.


AIADMK: "எம்பி சீட்டு வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றிவிட்டார்” - " என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அவர் தான் காரணம்..!




ஜூலையிலும் இடைவெளி விட்டு பலத்த மழை பெய்தது. இருப்பினும் ஜூன், ஜூலை மாதங்களில் மழை சராசரி அளவில் 26 சதவிகிதம் குறைவாக பதிவானது. மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் சராசரி 1593.9 மி.மீ., மழை பெய்ய வேண்டும். இந்தாண்டு அதே கால அளவில் 1186.6 மி.மீ., மழை பெய்தது. மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களில் பருவ மழை இடுக்கி மாவட்டத்தில் மிகவும் குறைவு என தெரியவந்தது. பயணிகள் வருகை குறைவு மாவட்டத்தில் பருவ மழை குறைந்தது போன்று சுற்றுலா பயணிகளின் வருகையும் வெகுவாக குறைந்தது.


Breaking News LIVE, AUG 6: மல்யுத்தம் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அரையிறுதிக்கு முன்னேற்றம்




பருவ மழை துவங்கிய பிறகு வானிலை ஆய்வு மையத்தின் மழை முன்னெச்சரிக்கை, இரவு நேர பயணம், சுற்றுலா பகுதிகளில் கட்டுப்பாடுகள் ஆகியவை பயணிகள் வருகை குறைய காரணமாகும். மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் கணக்குபடி கோடை சுற்றுலா சீசனான மே மாதம் இடுக்கி மாவட்டத்திற்கு 4, 79,979 பயணிகள் வருகை தந்தனர். அது ஜூனில் 2,67,472ம், ஜூலையில் 1,26,015 ஆக குறைந்தது. வாகமண் அட்வஞ்சர் பூங்காவுக்கு கடந்த மே மாதம் 1, 43,369 பயணிகள் வருகை தந்தனர். அது கடந்த மாதம் ஜூலையில் 26, 918 ஆக குறைந்தது குறிப்பிடத்தக்கது.