Breaking News LIVE, AUG 6:வங்கதேச ஓட்டலுக்கு தீ வைப்பு; 24 பேர் உடல் கருகி உயிரிழப்பு

Breaking News LIVE, AUG 6: உள்ளூர் தொடங்கி உலக நாடுகள் வரையிலான முக்கிய நிகழ்வுகளை பற்றி, உடனடியாக அறிய ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்து இருங்கள்.

குலசேகரன் முனிரத்தினம் Last Updated: 06 Aug 2024 09:45 PM
தெலங்கானா மாநிலம் ஸ்ரீரங்கப்பூர் மண்டலம் ஜானம்பேட் கிராமத்தில் உள்ள வீட்டிற்குள் முதலை நுழைந்ததால் அதிர்ச்சி

தெலங்கானா மாநிலம் ஸ்ரீரங்கப்பூர் மண்டலம் ஜானம்பேட் கிராமத்தில் உள்ள வீட்டிற்குள் முதலை நுழைந்ததால் அதிர்ச்சி. உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் 5 மணி நேர போராட்டத்திற்கு பின் முதலையை பத்திரமாக மீட்டு கிருஷ்ணா நதியில் விட்டனர்.

Zepto To Bengaluru : அலுவலக வாடகையை சேமிக்க மும்பையில் இருந்து பெங்களூருக்கு மாறும் Zepto நிறுவனம்

Bengaluru : அலுவலக வாடகையை சேமிக்க மும்பையில் இருந்து பெங்களூருவுக்கு மாறும் Zepto நிறுவனம். மாதம் 50 லட்சம் வரை வாடகை தர வேண்டியதாக இருப்பதால் விற்பனையகத்தை பெங்களூருவுக்கு மாற்றலாகிறது

Tamilnadu Weatherman Update : தென் சென்னை, தாம்பரம், புறநகர் பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்பு - தமிழ்நாடு வெதர்மேன்

Tamilnadu Weatherman Update : தென் சென்னை, தாம்பரம், புறநகர் பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்பு - தமிழ்நாடு வெதர்மேன்





Breaking News LIVE, AUG 6:வங்கதேச ஓட்டலுக்கு தீ வைப்பு; 24 பேர் உடல் கருகி உயிரிழப்பு
9ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

வரும் 9ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

மல்யுத்தம் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அரையிறுதிக்கு முன்னேற்றம்

ஒலிம்பிக் மல்யுத்தம் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

ஹசீனா கோரிக்கை வைத்தார். அதன் அடிப்படையில் அவர் இந்தியாவும் வந்தார்: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

பதவி விலகியதற்கு பிறகு தற்காலிகமாக இந்தியா வருவதற்கு ஷேக் ஹசீனா கோரிக்கை வைத்தார்.


அதன் அடிப்படையில் அவர் இந்தியாவும் வந்தார்: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாநிலங்களவையில் விளக்கம்

துணைநிலை ஆளுநராக நாளை பதவியேற்கிறார் கைலாசநாதன்

புதுச்சேரியின் புதிய துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைலாசநாதனை ஆளுநர் மாளிகையான ராஜ் நிவாஸில் வரவேற்ற முதலமைச்சர் ரங்கசாமி.


துணைநிலை ஆளுநராக நாளை பதவியேற்கிறார் கைலாசநாதன்

ஒலிம்பிக் தொடர்; காலிறுதிக்கு தகுதி பெற்றார் வினேஷ் போகத்

ஒலிம்பிக் தொடரில் மல்யுத்தம் போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகத் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

Breaking News LIVE: தங்கர்பச்சான் பேட்டி

எங்காவது தமிழ்நாட்டில் விவசாயம் செய்து கோடீஸ்வரன் ஆகியவைகளை பார்த்து உள்ளீர்களா?


விவசாயிகள் வாழ்நாள் முழுவதும் காலநிலை மாற்றம் மற்றும் கடனுடன் போராடி வருகிறார்கள்.


ஏற்கனவே அரசு கொடுக்கும் சாராயத்தை குடித்து லட்சக்கணக்கான மக்கள் இறக்கிறார்கள்... பாமலினை எப்போது இறக்குமதி செய்கிறீர்கள்? ஏன் இறக்குமதி செய்கிறீர்கள்?


வெளிநாட்டில் இருந்து வாங்குவதால் அதில் கிடைக்கும் கமிஷன் கிடைக்க வேண்டி பாமாலின் இறக்குமதி செய்கிறீர்கள்... முதல்வர் வீட்டிலும், வேளாண் துறை அமைச்சர் வீட்டிலும் பாமாலின் மூலம் சமைக்கிறார்களா??


பக்கத்து மாநிலமான கேரளாவை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்.. அங்கு விளைகிற தேங்காயை வைத்து என்னென்ன செய்கிறார்கள்...


தமிழ்நாட்டில் உற்பத்தி ஆகக்கூடிய நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் ஆகியவற்றுக்கு உரிய விலையை கொடுத்து வாங்கி, பாமாலினுக்கு மாறுதலாக விநியோகம் செய்யுங்கள்...


பதநீர், நீரா உள்ளிட்ட பானங்களை இறக்கி விற்பனை செய்ய கூடாது என சொல்லாமல் திமுக அரசு அதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.... விவசாய குடும்பங்களை அழவைத்து என்ன பயன்?

Breaking News LIVE, AUG 6: 5வது மாநில திட்டக் குழுக் கூட்டம் தொடங்கியது!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 5-வது மாநில திட்டக் குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் மூலம் மாணவர்கள் மட்டுமின்றி கல்வித்துறையில் வளர்ச்சி ஏற்படுள்ளதாகவும் திட்டக்குழுவின் அறிக்கைதான் தி.மு.க. ஆட்சியின் மார்க் ஷிட் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அரசின் முடிவுக்கு முழு ஆதரவு அளிப்போம் - எதிர்க்கட்சிகள் முடிவு

வங்கதேச விவகாரத்தில் அரசின் முடிவுக்கு முழு ஆதரவு அளிப்போம் என, அனைத்துக்கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒருமனதாக தெரிவித்துள்ளன. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Breaking News LIVE, AUG 6: நாளை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் நாளை  ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டி, விழுப்பிரம், கடலூரி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர். நாகை. புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Breaking News LIVE: கோவை மாநகராட்சி மேயராக ரங்க நாயகி தேர்வு

கோவை மாநகராட்சியின் மேயராக திமுக கவுன்சிலர் ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 


கோவை மாநகராட்சியில் 29வது வார்டு கவுன்சிலராக ரங்கநாயகி உள்ளார். ரங்கநாயகியை தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 

Breaking News LIVE: மயிலாடுதுறை: காவிரியை வணங்கி வரவேற்ற தருமபுரம் ஆதீனம்

 


மேட்டூர் தண்ணீர் திறக்கப்பட நிலையில், அது  மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்தடைந்தது.


அதனைத் தொடர்ந்து தருமபுரம் வந்த காவிரியை தருமபுரம் ஆதீனம் 27 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தர் பரமாச்சாரியார் சுவாமிகள் வரவேற்று அபிஷேகித்து, நெல்,மலர், காசுகளை  தூவி வணங்கி வரவேற்றார்.

வங்கதேச விவகாரம் - அனைத்துக் கட்சி கூட்டம்

வங்கதேச விவகாரத்தில் அடுத்தகட்டமாக இந்திய என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து முடிவெடுக்க, மத்திய அரசு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல்

மேலும் குறைந்த தங்கம் விலை - கிராமுக்கு எவ்வளவு?

தங்கம் விலை கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 51 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 560 ரூபாய் குறைந்துள்ளது.  வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3.50 குறைந்து ரூ.87.5-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Breaking News LIVE: 11 மாதம்.. சுரங்கப்பணியை வெற்றிகரமாக முடித்த ‘சிறுவாணி’ இயந்திரம்!

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்டத் திட்டத்தின் வழித்தடம் 3ல் ‘சிறுவாணி’ எனப் பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம், சேத்துப்பட்டு நிலையத்தில் இருந்து ஸ்டெர்லிங் சாலை சந்திப்பு வந்தடைந்தது. இதனை மெட்ரோ ரயில் நிர்வாகப் பணியாளர்கள், அலுவலர்கள் பலரும் மலர் தூவி வரவேற்றனர். சேத்துப்பட்டு நிலையத்தில் கடந்தாண்டு செப்டம்பர் 9ம் தேதி சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கியது இந்த ‘சிறுவாணி’ இயந்திரம். 703 மீட்டர் நீளமுள்ள சுரங்கப் பாதை பணியை இன்று வெற்றிகரமாக முடித்துள்ளது.

Breaking News LIVE: ஹசீனாவின் அடைக்கலம் தற்காலிகமானதே - இந்திய அரசு விளக்கம்

 


வங்கதேச உள்நாட்டுக் கலவரம் காரணமாக தனது பிரதமர் பதவியை ராஜினாம செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசினாவுக்கு தற்காலிகமாக இங்கு தங்கும் அனுமதியை இந்தியா வழங்கியுள்ளதாகவும் ஹசீனா பிரிட்டனுக்கு இடம்பெயர்வதற்கான அனுமதி நிலுவையில் உள்ளதால் அவர் தற்காலிகமாக இந்தியாவில் தங்கவைக்கப்படுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Breaking News LIVE: இந்திய - வங்காளதேச எல்லையில் பாதுகாப்பு படையினருக்கு விடுமுறை ரத்து 

 


இந்திய - வங்காளதேச எல்லையில் வேலை பார்க்கும் பாதுகாப்பு படையினருக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. வங்காளதேசத்தில் சுதந்திர போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. 


இதையடுத்து மாணவர்கள் கலவரத்தில் குதித்தனர். பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலக கோரி போராட்டம் வலுத்தது. நிலைமை மோசமானதால் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகிவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில், வங்காளதேச நிலவரம் இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது என இரு நாட்டு எல்லையில் உஷார் நிலையை எல்லை பாதுகாப்பு படை பிறப்பித்துள்ளது. 

Background


  • எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 22 பேர் கைது - இன்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை தமிழக அமைச்சர் ராதாகிருஷ்ணன் சந்திக்கிறார்

  • நெல்லை மாநகராட்சி மேயராக ராதாகிருஷ்ணன் தேர்வு - கோவை மேயர் வேட்பாளராக திமுகவின் ரங்கநாயகி அறிவிப்பு

  • யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்த கோரிய மனு - மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

  • பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று பணி நியமன ஆணைகளை வழங்கிட வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்

  • இணையதள வாயிலாக கட்டட வரைபட அனுமதி பெறுவதற்கான கட்டணங்கள் உயர்வு - டிடிவி தினகரன் கண்டனம்

  • சேலம், நாமக்கல், தூத்துக்குடி மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழை - காட்பாடி, சித்தூர், பேருந்து நிலையங்களில் தேங்கிய மழைநீர்

  • இந்தியாவிலிருந்து ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான மாட்டிறைச்சி ஏற்றுமதி - மாடுகளை பாதுகாப்போம் என கூறிவிட்டு ஏற்றுமதி செய்வதா என திமுக எம்.பி., தங்கத் தமிழ்ச்செல்வன் கேள்வி 

  • வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 400-ஐ தாண்டியது - அடையாளம் காணப்படாத 29 சடலங்கள் ஒரே இடத்தில் அடக்கம்

  • வங்கதேச சூழல் குறித்து மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை - இந்தியா வந்தடைந்த ஷேக் ஹசினா  உடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு

  •  வங்கதேசத்தில் இருந்து ஒரு கோடி பேர் அகதிகளாக மேற்குவங்கத்தில் நுழையலாம் - பாஜக தலைவர் எச்சரிக்கை

  • பீகார் முதல் அமைச்சர் அலுவலகத்தை தகர்க்கப் போவதாக மின்னஞ்சல் அனுப்பிய நபர் கைது

  • வங்கதேச பிரதமர் பதவியில் இருந்து விலகி இந்தியாவில் தஞ்சமடைந்த ஷேக் ஹசீனா - லண்டன் அல்லது பெலாரஸ் நாட்டிற்கு செல்லலாம் என தகவல்

  • வங்கதேசத்தில் நாடாளுமன்றத்தை சூறையாடிய போராட்டக்காரர்கள் - முன்னாள் பிரதமரின் சிலை தகர்ப்பு

  • ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது ஏவுகணை தாக்குதல் - பலர் காயம்

  • பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அரையிறுதியில் இன்று ஜெர்மனியை எதிர்கொள்கிறது இந்திய அணி

  • பாரிஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் தகுதிச் சுற்று போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இன்று களம் காண்கிறார்

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.