பிக்பாஸ் தமிழ்
வருடந்தோறும் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வந்தது . இதுவரை இந்த நிகழ்ச்சியில் 7 சீசன்கள் கடந்துள்ளன. 7 சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை அனைவரும் ஆவலாக எதிர்பார்த்து வந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தான் தொகுத்து வழங்கமாட்டேன் என்று கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சினிமாவில் நிறைய கமிட்மெண்ட்ஸ் இருப்பதால் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்து வரும் தக் லைஃப் படம் ஏற்கனவே பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப்போனது.
தேர்தல் பிரச்சாரங்களில் கமல் பிஸியாக இருந்ததே இந்த தாமதத்திற்கு காரணம் என்று கூறப்பட்டது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் தக் லைஃப் படப்பிடிப்பை மேற்கொண்டு பாதிக்கக்கூடாது என்று கமல் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து செஃப் வெங்கடேஷ் பட் விலகியது அந்த நிகழ்ச்சியின் மீதான ஈடுபாட்டை குறைத்துள்ளது. தற்போது விஜய் தொலைக்காட்சியில் அதிக பார்வையாளர்களை ஈர்த்த நிகழ்ச்சியான பிக்பாஸில் கமல் இல்லாதது இந்த நிகழ்ச்சிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது
பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது
பல்வேறு விதமான போட்டியாளர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த போட்டியாளர்கள் வியந்து பார்ப்பவராகவும் கட்டுப்படும் ஒருவராகவும் கமலின் ஆளுமை இந்திருக்கிறது. பார்வையாளர்களை சுவாரஸ்யப் படுத்துவதிலும் போட்டியாளர்களை வழிநடத்துவதிலும் தனக்கென ஒரு தனி ஃபார்முலாவை உருவாக்கி இருக்கிறார் கமல்ஹாசன். மேலும் ஒவ்வொரு வாரமும் பார்வையாளர்களுக்கு ஒரு புத்தகத்தை பரிந்துரை செய்வது கவனிக்கப்பட வேண்டிய கலைஞர்களை அடையாளப் படுத்துவது என இந்த நிகழ்ச்சியில் பல முன்னுதாரணமான செயல்களை செய்திருக்கிறார் கமல். கமலுக்குப் பின் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது யார் என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது. முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு சிலம்பரசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தற்போது கமலுக்குப் பின் பிக்பாஸ் நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக எதிர்பார்க்கப் படுகிறது.
சிலம்பரசன் தவிர்த்து பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஏற்ற திரை பிரபலம் யார் என்கிற விவாதம் சமூக வலைதளங்களில் தொடங்கியுள்ளது.