மேலும் அறிய

கீழமை நீதிமன்றம் தந்த தீர்ப்பை ரத்து செய்யுங்கள் - யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

இந்த வழக்கில் நோக்கம், சிசிடிவி காட்சிகள், புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி, தலை மறைவாக இருந்தது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கீழமை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது

கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் 10 பேருக்கும் ஆயுள் தண்டனை அளித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் மதுரை கிளையில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதில், "இந்த வழக்கில் நோக்கம், சிசிடிவி காட்சிகள், புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி, தலை மறைவாக இருந்தது  ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கீழமை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
 

கீழமை நீதிமன்றம் தந்த தீர்ப்பை ரத்து செய்யுங்கள் - யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
 
இந்த வழக்கில் சாட்சிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் பெரும்பாலும் அதிகாரிகளும், நிபுணர்களுமே. இந்த வழக்கில் பல ஆண்டுகளாக சிறையில் உள்ள நிலையில் இவற்றைக் கருத்தில் கொண்டு, கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்தும், அதுவரை ஜாமீன் வழங்கியும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஸ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய 1 வார கால அவகாசம் கோரப்பட்டது. அதை தொடர்ந்து நீதிபதிகள் வழக்கை ஜூன் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
 

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி மதுரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி 

மதுரைச் செல்லூர் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் "சீர்மரபு பழங்குடி சமூகங்களின் கூட்டமைப்பு சார்பாக மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குரிய 20% இடஒதுக்கீட்டினை உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அமல்படுத்தவும், உடனடியாக தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தவும், தமிழ்நாட்டில் 2000 முதல் 2021ம் ஆண்டு வரை அனைத்து சாதியினரும் அடைந்த கல்வி மற்றும் அரசுப் பணிகள் குறித்த வெள்ளையறிக்கை வெளியிடவும் போன்ற கோரிக்கையை வலியுறுத்தி மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் ஏப்ரல் 10ஆம் தேதி காலை 9 மணி முதல் 5 மணி வரை உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி அதிகாரிகளுக்கு மனு அளித்தோம். ஆனால் அதிகாரிகள் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி அளிக்கவில்லை.எனவே, 2022 ஏப்ரல் 10 தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு அவசர வழக்காக நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில்,மதுரை மாநகரில் சித்திரைப் பெருவிழாவினை முன்னிட்டு காவலர்கள் பற்றாக்குறை உள்ளதால் போதிய பாதுகாப்பு வழங்க இயலாது.பொதுமக்களுக்கு தொந்தரவு செய்யாமல், ஒலிப் பெருக்கியின் சத்தம் அதிகம் இல்லாமல், சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வண்ணம் அமைதியான முறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தால் அனுமதி வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து நீதிபதி, மதுரை மாநகர காவல் ஆணையர், சுப்பிரமணியபுரம் காவல் ஆய்வாளர் ஆகியோர் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும். உண்ணாவிரதப் போராட்டம் 2022 ஏப்ரல் 10-ஆம் தேதி காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்றப்பட்டு நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.

தலைப்பு செய்திகள்

காரைக்குடியில் பாரம்பரிய உணவு திருவிழா ; சுவைகளில் சங்கமித்த கலாச்சாரங்கள்!
காரைக்குடியில் பாரம்பரிய உணவு திருவிழா ; சுவைகளில் சங்கமித்த கலாச்சாரங்கள்!
மதுரையில் இன்று (28.07.2026) ஒரே நாளில் பல இடங்களில் மின்தடை ஏற்படுகிறது - உடனே பாருங்க !
மதுரையில் இன்று (28.07.2026) ஒரே நாளில் பல இடங்களில் மின்தடை ஏற்படுகிறது - உடனே பாருங்க !
பறவைகளின் பசிக்கு பழ மரங்கள்: ரூ.5000 நிதி அளித்த விவசாயி; முதல்வர், ரஜினிக்கு கோரிக்கை!
பறவைகளின் பசிக்கு பழ மரங்கள்: ரூ.5000 நிதி அளித்த விவசாயி; முதல்வர், ரஜினிக்கு கோரிக்கை!
தென் மாவட்ட மருத்துவ கழிவு முறைகேடு: மக்கள் உயிருக்கு ஆபத்து - மருத்துவர்கள் நூதன மனு !
தென் மாவட்ட மருத்துவ கழிவு முறைகேடு: மக்கள் உயிருக்கு ஆபத்து - மருத்துவர்கள் நூதன மனு !

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
’’நீதி மறுக்கும் நிர்வாகம்; மனோன்மணியம் பல்கலை ஊழியர்களுக்கு இதை செய்ங்க’’ அன்புமணி வலியுறுத்தல்
’’நீதி மறுக்கும் நிர்வாகம்; மனோன்மணியம் பல்கலை ஊழியர்களுக்கு இதை செய்ங்க’’ அன்புமணி வலியுறுத்தல்
Montek Singh: யார் இந்த மான்டேக் சிங் அலுவாலியா? தமிழக அரசுக்காக செய்யப்போகும் வேலை என்ன? வருவாய் உயருமா?
யார் இந்த மான்டேக் சிங் அலுவாலியா? தமிழக அரசுக்காக செய்யப்போகும் வேலை என்ன? வருவாய் உயருமா?
TN Weather News: இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Mekedatu Dam: மேகதாது விவகாரம்.. தமிழ்நாட்டிற்கு அதிகாரமில்லை.. மத்திய அமைச்சரின் பதிலால் சர்ச்சை!
Mekedatu Dam: மேகதாது விவகாரம்.. தமிழ்நாட்டிற்கு அதிகாரமில்லை.. மத்திய அமைச்சரின் பதிலால் சர்ச்சை!
Bolero Neo Plus: நாட்டின் மலிவான 9 சீட்டரில் இருக்கும் குறைகள்..! SUV யாருக்கு ஒத்து வராது? மாற்று ஆப்ஷன்கள் என்ன?
நாட்டின் மலிவான 9 சீட்டரில் இருக்கும் குறைகள்..! SUV யாருக்கு ஒத்து வராது? மாற்று ஆப்ஷன்கள் என்ன?
Top 5 Cars: ரூ.10 லட்சம் பட்ஜெட்..! அதிக மறுவிற்பனை மதிப்பை கொண்ட டாப் 5 கார்கள் - முன்னணி ப்ராண்ட் மாடல்கள்
ரூ.10 லட்சம் பட்ஜெட்..! அதிக மறுவிற்பனை மதிப்பை கொண்ட டாப் 5 கார்கள் - முன்னணி ப்ராண்ட் மாடல்கள்
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
Embed widget