உலகப் புகழ்பெற்ற மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாக விளங்கும் மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள மலைக்கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாக நடைபெற்று வருகிறது.


குறிப்பாக அடுக்கம், வெள்ளக்கெவி, பாலமலை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு உள்ளிட்ட மலைக்கிராமங்களில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் ஆரஞ்சு பழம் ஊடுப‌யிராக‌ சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதிகளில் விளையும் ஆரஞ்சு அதிக சுவையுடன் இருப்பதால் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட வெளியூர் மார்க்கெட்டில் அதற்கு தனிம‌வுசு உள்ளது.


பந்த் நடத்தினால் பாஜக மீது நடவடிக்கை... எச்சரித்த நீதிமன்றம்..! ஜகா வாங்கிய அண்ணாமலை..!




இந்தநிலையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால் ஆரஞ்சு விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, திருச்சி உள்ளிட்ட வெளியூர் சந்தைகளுக்கு மராட்டிய மாநிலம் நாக்பூரில் இருந்து நாக்பூர் ஆரஞ்சு பழங்கள் அதிக அளவு வரத்தாகியுள்ளது. இதனால் கொடைக்கானல் ஆரஞ்சு பழத்தின் விலையும் சரிந்துவிட்டது.


முதலமைச்சரின் பசும்பொன் பயணம் ரத்து... காரணம் இதுதான்! அறிக்கை மூலம் வெளியான விளக்கம்!




ஒருபுறம் விளைச்சல் பாதிப்பு, மறுபுறம் விலை குறைவால் கொடைக்கானலை சேர்ந்த ஆரஞ்சு சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து அடுக்கத்தை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் இந்த ஆண்டு தொடர் மழையால் ஆரஞ்சு பழங்கள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.


பஸ்ஸில் ஆரம்பித்த பழக்கம்.. ஜூஸில் முடிந்த சோகம்.. நண்பனை நாசூக்காக கொன்றாரா தோழி..?




கடந்த ஆண்டு ஒரு கிலோ ஆரஞ்சு பழம் ரூ.50 ரூபாய் வரை விற்பனையானது. ஆனால் இந்த ஆண்டு அதன் விலை கிலோ ரூ.20-க்கு விற்பனையாகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகளுக்கு பெரும் நட்டம் ஏற்பட்டுள்ளது. இதுதவிர ப‌ல்வேறு ப‌குதிக‌ளில் ஆர‌ஞ்சு ப‌ழ‌ங்க‌ளில் நோய் தாக்க‌ம் ஏற்ப‌ட்டுள்ளதும் விளைச்சல் பாதிப்புக்கு காரணம். எனவே தோட்டக்கலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, மலைக்கிராம விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண