திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில் இயக்க மதுரை ரயில்வே கோட்டம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி திருச்செந்தூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06910) திருச்செந்தூரில் இருந்து அக்டோபர் 30 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 9 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.

 



 

மறு மார்க்கத்தில் திருநெல்வேலி - திருச்செந்தூர் சிறப்பு ரயில் (06909) திருநெல்வேலியில் இருந்து அக்டோபர் 30 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 11.05 மணிக்கு புறப்பட்டு நடுஇரவு 12.30 மணிக்கு திருச்செந்தூர் சென்று சேரும். இந்த ரயில்கள் ஆறுமுகநேரி, நாசரேத், ஸ்ரீ வைகுண்டம், செய்துங்கநல்லூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 8 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் மற்றும் 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டியுடன் கூடிய சரக்கு பெட்டிகள் இணைக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


 







 






அதே போல் ராமேஸ்வரம் - திருப்பதி ரயில் தாமதமாக புறப்பட்டது.

 

ராமேஸ்வரம் ரயில் பெட்டி பராமரிப்பு நடைமேடைகளில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக  நேற்று (28.10.2022) ராமேஸ்வரத்தில் இருந்து மாலை 04.20 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் - திருப்பதி விரைவு ரயில் (16780) நேற்று இரவு 11.00 மணிக்கு 400 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது.