நத்தம் அருகே கந்து வட்டி கேட்டு குடும்பத்தினரை ஊர் மந்தையில் மரம் மற்றும் மின்கம்பத்தில் கட்டி வைத்திருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சாத்தாம்பட்டியை சேர்ந்த ராமன்(52) தற்போது மதுரை ஒத்தக்கடை பகுதியில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது சொந்த ஊரான சாத்தாம்பாடி பகுதியை சேர்ந்த அம்பலம் மகன் ராஜேஷ் என்பவரிடம் 4 வருடத்திற்கு முன்பு ரூ.1 லட்சம் கடன் பெற்றுள்ளார். மாத மாதம் வட்டி முறையாக செலுத்தி வந்த போதிலும் கொரோனா காலத்தில் வட்டி செலுத்த முடியாத சூழ்நிலையில் ராமன் சொந்த ஊருக்கு வராமல் இருந்துள்ளார் .
IND vs BAN T20 LIVE : விராட் கோலி, ராகுல் அதிரடி... வங்காளதேசத்துக்கு 185 ரன்கள் இலக்கு
இந்நிலையில் சாத்தாம்பாடியில் உறவினர் வீட்டு காதணி விழாவிற்காக நேற்று முன்தினம் ராமன் தனது மனைவி சுமதி, மகன் ஜோதிமணி ஆகியோரை அனுப்பி வைத்துள்ளார். அப்போது அவர்களைப் பார்த்த ராஜேஷ் குடும்பத்தினர் வட்டியும், அசலையும் உடனடியாக கொடுக்க வேண்டும் என்று நிகழ்ச்சிக்கு வந்தவர்களை அழைத்து வந்து மந்தையில் வைத்து மின் கம்பத்தில் மற்றும் மரத்தில் கட்டி வைத்து கன்னத்தில் தாக்கி மாலை 6 மணி கட்டி வைத்து இரவு 11 மணி வரை கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது.
Chennai Rain: ”30 செ.மீ மழை பெய்தும் சென்னையில் பாதிப்பு இல்லை” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இதையடுத்து ராமனின் மகன் ஜோதிமணி அளித்த புகாரின் பெயரில் ராஜேஷ்,அம்பலம்,சாந்தி ஆகிய மூவரின் மீது கந்து வட்டி தடுப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்து ராஜேஷை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய அம்பலம், சாந்தி ஆகியோரை நத்தம்காவல் நிலைய ஆய்வாளர் தங்க முனியசாமி தலைமையிலான போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். கந்து வட்டி கேட்டு குடும்பத்தினரை ஊர் மந்தையில் மரம் மற்றும் மின்கம்பத்தில் கட்டி வைத்திருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்