Chennai Rain: 30 செ.மீ மழை பெய்தும் சென்னையில் எந்த பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


சென்னை விருகம்பாக்கம் ராஜமன்னார் சாலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு செய்தார். சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, சென்னை மாநகராட்சி மன்ற மண்டல குழு தலைவர் கிருஷ்ணா மூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் கண்ணன் உள்ளிட்டோர் ஆய்வின் போது உடனிருந்தனர்.


பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருவதால் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் பெரிய அளவு மலை பெய்தும் அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக பாதிப்புகள் ஏற்படவில்லை என்று கூறினார்.


கடந்த ஆண்டுகளில் பெய்த கனமழையால் சாலைகளில் அதிக அளவு மழை நீர் தேங்கியிருந்தது. ஆனால் இந்த ஆண்டுகளில் 30 செ.மீ மழை பெய்தும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் மழைநீர் வடிகால் பணிகளுக்கு திருப்புகழ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.  மேலும் ரூபாய் 710 கோடி செலவில் 157 கிலோ மீட்டர் பணிகள் முடிந்துள்ளது என தெரிவித்தார். முதலமைச்சர் நேரடியாக பணிகள் நடைபெற்ற இடத்திற்கு சென்று ஆய்வு மொற்கொண்டு பணிகள் விரைவாக முடிவடைந்துள்ளது.


சென்னையின் ஒரு சில இடங்களில் மட்டும் மலை நீர் தேங்குகிறது. மழைநீர் தேங்கிய இடங்களில் அதனை அகற்ற பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு அதிக அளவு நீர் தேங்கியதால் 1,200 மோட்டர் பம்புகள் பயன்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு சாலைகளில் தேங்கிய நீரை அகற்ற  400 மோட்டர் பம்புகள் பயன்பாட்டில் உள்ளது என தெரிவித்தார்.


”ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்கவில்லை”


சென்னையில் உள்ள ராஜ மன்னார் சாலையில், பி.டி.ராஜன் சாலைகளில் புதிய மழைநீர் வடிகால் அமைத்தது காரணமாக நீர் தேங்கவில்லை. கடந்த ஆண்டு பெய்த மழையால் சென்னையில் 16 சுரங்கப் பாதையில் நீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த ஆண்டு 16 சுரங்கப் பாதைகளில் அதிநவீன மோட்டர் வைத்து ஏர்படுகள் செய்ததால்  நீர் தேங்கவில்லை என தெரிவித்தார். சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு பாதிக்கபட்டது போன்று, இந்த ஆண்டு பாதிக்கப்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.


மேலும் அவர் கூறியதாவது, சென்னையில்  30 செ.மீ மழை பெய்தும் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை எனவும் மேடவாக்கம், புழுதிவாக்கம், கல்லுக் குட்டை உள்ளிட்ட இடங்களில் எந்த பாதிப்பு இல்லை என தெரிவித்தார். வடகிழக்கு பருவமழை முடிந்த ஒரே நாளில் 200 முகாம்கள் மருத்துவ முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார்.