மதுரையைச் சேர்ந்த சுந்தர்ராஜன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.அதில், "காவிரி ஆறு தலைக் காவேரியில் உருவாகி பூம்புகார் கடலில் கலக்கிறது. இது கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் விவசாயத்திற்கு பெரிதும் பயன்படுகிறது.தமிழகத்தில் நாகபட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், நாமக்கல், கடலூர், புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களும்  காவிரிப்படுகைகள் அமைந்துள்ளது.

 

இந்த 8 மாவட்டங்களில் நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்கள் காவிரி ஆற்றின் மூலம் 2.69 லட்சம் ஹெக்டேர் பாசன வசதி பெறுகிறது. மீதமுள்ள 6 மாவட்டங்களும் 2.20 என்ற அளவில் மட்டுமே பாசன வசதி பெறுகிறது. நல்ல பருவநிலை காலங்களில் காவிரி ஆற்றின் நடுவே தடுப்பணைகள் இல்லாததால் 2 லட்சத்துக்கும் அதிகமான கனஅடி தண்ணீர் கடலில் கலந்து வருகிறது. தற்போது காவிரி ஆற்றில் மாயனூரில் தடுப்பணை ஒன்று உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 1.04 டிஎம்சி அடியாக உள்ளது‌.

 

இதே போல், கூடுதல் தடுப்பணைகள் கட்டப்பட்டால் தண்ணீரை சேமித்து, புதிய நீர் வழித்தடங்கள் மூலம் விவசாயம் செய்ய முடியாத மற்ற நிலங்களுக்கும் பயன்படுத்தலாம்.இதற்காக 2018 அப்போதைய தமிழக அரசு காவிரியின் குறுக்கே புஞ்சை புகளூரில் ரூ.490 கோடி செலவில் தடுப்பணை கட்ட திட்டம் வகுத்தது. ஆனால் தற்போது வரை இத்திட்டம் நடைமுறைப்படுத்தவில்லை. எனவே, கடலில் வீணாகக் கலக்கும் காவிரி ஆற்றின் நீரினை பயனுள்ள வகையில் சேமிக்கும் விதமாக புஞ்சை புகளூரில் தடுப்பணை கட்ட உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரர் கூறுவது குறுகிய கால பணி இல்லை. ஆனால் இது முக்கிய பிரச்சனை என கருத்து தெரிவித்த நீதிபதிகள்.

 

அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? காவிரி ஆற்றில் கட்டப்படவுள்ள தடுப்பணை திட்டத்தின் முழுவிவரம் குறித்து தமிழக பொதுப்பணித்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

 

 





மற்றொரு வழக்கு














 

நீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்படும் அறிக்கையில் அரசு அதிகாரிகள் முறையாக தேதி கையெழுத்தை குறிப்பிட்டு இருக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சேர்ந்த ராமசுப்பு உயர்நீதிமன்ற மதுரை கிளைகள் தாக்கல் செய்த மனு.எங்கள் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம் இந்நிலையில் சிலர் அனைவருக்கும் பொதுவான நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டி வருகிறார்கள் இதனை அகற்ற வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

 

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயன பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில்   வாட்டாச்சியர் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கையெழுத்து , தேதி குறிப்பிடப்படாமல் இருந்தது இதனைப் பார்த்து கோபமடைந்த நீதிபதிகள் அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் அறிக்கைகளில் முறையாக கையெழுத்திட்டு தேதி குறிப்பிட வேண்டும் அவ்வாறு இல்லாமல் வெறும் அறிக்கை தாக்கல் செய்தால் நாங்கள் எவ்வாறு உத்தரவில் குறிப்பிடுவது இதை ஏற்றுக் கொள்ள முடியாது இதுபோன்ற அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்சரித்த நீதிபதிகள் இனி தேதி, கையெழுத்து  குறிப்பிடாமல் இருந்தால் அந்த அதிகாரி மறுநாள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நேரிடும் மேலும் அன்று முழுவதும் அவர்கள் நீதிமன்றத்தில் காத்திருக்க நேரிடும் என கருத்து கூறி வழக்கினை ஒத்தி வைத்தார்.