IND vs BAN T20 LIVE : இந்திய அணி அசத்தல் வெற்றி

IND vs BAN T20 Score Live : உலககோப்பை சூப்பர் 12 ஆட்டத்தில் இந்தியா - வங்காளதேசம் மோதும் போட்டியின் ஸ்கோர் நிலவரங்களை உடனுக்குடன் கீழே காணலாம்.

சுகுமாறன் Last Updated: 02 Nov 2022 05:50 PM
இந்திய அணி திரில் வெற்றி

இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது.

6 பந்துகளுக்கு 20 ரன்கள் தேவை

வங்காளதேச அணிக்கு கடைசி ஓவரில் 20 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறும்.

ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய பாண்டியா

13 ஆவது ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஹார்திக் பாண்டியா.

வங்காளதேசம் 84/2

வங்கதேச தொடக்க ஆட்டக்காரர்கள் லிட்டன் ரன் அவுட்டாக, மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஷான்டோ கேட்ச் ஆகி நடையைக் கட்டினார்.

அதிரடி காட்டும் ஷான்டோ

லிட்டன் ஆட்டமிழந்ததை அடுத்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஷான்டோ பவுண்டரி, சிக்சர் என பந்தை விளாசி வருகிறார்.

ரன் அவுட்டானார் லிட்டன் தாஸ்

அதிரடியாக விளையாடிய வங்கதேச தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் 27 பந்துகளில் 60 ரன்கள் எடுத்திருந்தபோது கே.எல்.ராகுல் ரன் அவுட் செய்தார்.

ஓவர்கள் குறைப்பு

9 ஓவர்களுக்கு 85 ரன்கள் இலக்காக வங்கதேசத்துக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டன. மொத்தம் 16 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்தால் வங்கதேசம் வெற்றி பெறும்.

ஓவர்கள் குறைக்கப்பட்டால் வங்கதேச அணிக்கு நிர்ணயிக்கப்படும் இலக்கு!

மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டால் வங்க தேச அணிக்கு நிர்ணயிக்கப்படும் இலக்கு


19 overs: 177
17 overs: 160
15 overs: 142
12 overs: 112
10 overs: 89

மழை குறுக்கீடு: ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தம்

வங்காளதேசம் 7 ஓவர்களில் 66 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கீடு செய்தது.  இதனால், ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 78 பந்துகளில் அந்த அணி 119 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.

அரை சதம் விளாசிய லிட்டன் தாஸ்

வங்காளதேசம் அணி அதிரடியாக விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரராக களம் புகுந்த லிட்டன் தாஸ் அரை சதம் விளாசினார். விக்கெட் இழப்பின்றி அந்த அணி 6 ஓவர்களில் 60 ரன்கள் எடுத்து சேஸிங் செய்து வருகிறது.

விக்கெட் இழப்பின்றி 4 ஓவர்களில் 35 ரன்கள் எடுத்துள்ள வங்காளதேசம்

185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வரும் வங்காளதேசம் 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 35 ரன்கள் எடுத்துள்ளது. புவனேஸ்வர் குமார் 2 ஓவர்கள் வீசினார். அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி ஆகியோரும் தலா 1 ஓவர் வீசினர் எனினும், விக்கெட் எதுவும் விழவில்லை.

வங்காளதேசத்திற்கு 185 ரன்கள் இலக்கு

இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது.

ரன் அவுட்டான தினேஷ் கார்த்திக்

ஹார்திக் பாண்டியா ஆட்டமிழந்ததை தொடர்ந்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் ஒரு பவுண்டரி விளாசினார். அவர் 7 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட்டானார்.

அரை சதம் பதிவு செய்த கோலி!

37 பந்துகளில் அரை சதம் பதிவு செய்தார் முன்னாள் கேப்டன் விராட் கோலி.

வந்தவேகத்தில் பெவிலியன் சென்ற ஹார்திக் பாண்டியா

சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்ததை தொடர்ந்து களம் புகுந்த ஆல்-ரவுண்டர் ஹார்திக் பாண்டியா, ஹசன் முகமது பந்துவீச்சில் யாசிரிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். 4 விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளது இந்தியா.

அதிரடி காட்டி ராகுல் கேட்ச் ஆகி அவுட்

அரை சதம் பதிவு செய்த கே.எல்.ராகுல், சாகிப் பந்துவீச்சில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். அவர் 32 பந்துகளில் 50 ரன்களைப் பதிவு செய்தார்.

ஆட்டமிழந்தார் சூர்ய குமார் யாதவ்

அதிரடி வீரரான சூர்யகுமார் யாதவ் ஷாகிப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார்.

கே.எல்.ராகுல் அதிரடி ஆட்டம்...!

கடந்த சில போட்டிகளாக பார்மில் இல்லாத கே.எல்.ராகுல் இந்த போட்டியில் அதிரடியாக ஆடி வருகிறார். 

டி20 உலககோப்பையில் விராட்கோலி உலக சாதனை..!

உலககோப்பை டி20 வரலாற்றில் அதிக ரன்களை விளாசிய வீரர் என்ற உலக சாதனையை விராட்கோலி படைத்துள்ளார். 

இந்திய அணி பவர்ப்ளேவில் நிதான ஆட்டம்

இந்திய அணி பவர்ப்ளேவில் 1 விக்கெட் இழப்பிற்கு 37 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. 

ரோகித் - விராட்கோலி ஜோடி நிதான ஆட்டம்

ரோகித் சர்மா 2 ரன்களில் ஆட்டமிழந்ததால் கே.எல்.ராகுல் - விராட்கோலி ஜோடி தற்போது நிதானமாக ஆடி வருகிறது. 

இந்திய கேப்டன் ரோகித்சர்மா 2 ரன்களில் அவுட்

இந்திய கேப்டன் ரோகித்சர்மா 2 ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

டாஸ் வென்ற வங்காளதேசம்..! இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா..?

வங்காளதேச அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இதனால், இந்திய அணி முதலில் பேட் செய்கிறது. 

அடிலெய்ட் மைதானத்தில் குவியும் இந்திய ரசிகர்கள்...!

இந்தியா - வங்காளதேசம் போட்டியை காண இரு நாட்டு ரசிகர்களும் அடிலெய்ட் மைதானத்தில் சூழ்ந்துள்ளனர். 

Background

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலககோப்பை சூப்பர் 12 சுற்று விறுவிறுப்பான கட்டத்தை எட்டி வருகிறது. அரையிறுதிக்கு செல்லப்போவது  யார்? என்ற விறுவிறுப்பு அதிகரித்துள்ளதால் இனி வரும் ஒவ்வொரு போட்டிகளுமே அரையிறுதி வாய்ப்பை தீர்மானிக்கும் போட்டியாக மாறியுள்ளது.


இந்த நிலையில், குரூப் 2 பிரிவில் இன்று அடிலெய்ட் மைதானத்தில் இந்தியாவும், வங்காளதேசமும் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்திய அணிக்கு இந்த போட்டி மிகவும் முக்கியமான போட்டி ஆகும். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசம் ஆகும்.


குரூப் 2 பிரிவில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்திய அணி அணி 3வது இடத்தில் உள்ள வங்காளதேச அணியை எதிர்கொள்கிறது. இந்திய அணியும், வங்காளதேச அணியும் 3 ஆட்டங்களில் ஆடி 2 போட்டிகளில் வெற்றி, 1 போட்டியில் தோல்வியுடன் 4 புள்ளிகளுடன் சம இடத்தில் இருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இருப்பினும், இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி முதலிடத்திற்கு முன்னேறும் என்பதால் இரு அணிகளும் போட்டியை வெல்ல கடுமையாக போராடும்.









வங்காளதேச அணியை பொறுத்தவரை கடந்த போட்டியில் திரில் வெற்றி பெற்றதால் உற்சாகத்துடன் இருப்பார்கள். அந்த அணியின் தொடக்க வீரர் ஷேண்டோ பேட்டிங்கில் வலுவாக உள்ளார். அவருக்கு சவுமியா சர்கார், லிட்டன் தாஸ் ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது அவசியம். கேப்டன் ஷகிப் அல்ஹசன், ஆஃபிப் ஹொசைன், மொசடக் ஹொசைனும் பேட்டிங்கில் அசத்தினால் அந்த அணி வலுப்பெறும்.


இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இன்றைய போட்டியில் ஆடுவாரா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அவர் களமிறங்காவிட்டால் ரிஷப்பண்ட் களமிறங்குவார். வங்காளதேச அணியில் பந்துவீச்சில் டஸ்கின் அகமது வலுவாக உள்ளார்.  அவருக்கு எபாதத் ஹொசைன் உள்ளிட்ட மற்ற பந்துவீச்சாளர்கள் ஒத்துழைப்பு அளித்தால் அந்த அணி இந்தியாவுக்கு நெருக்கடி அளிக்கும்.


இந்திய அணியிலும் பந்துவீச்சு வலுவாகவே உள்ளது. பும்ரா இல்லாவிட்டாலும், முகமது ஷமி தலைமையில் வேகப்பந்து வீச்சாளர்கள் அசத்தி வருகின்றனர். அர்ஷ்தீப்சிங், புவனேஷ்வர்குமார் வேகத்தில் கலக்கி வருகிறார்கள். அவர்களுடன் சுழலில் அஸ்வினும், அக்‌ஷர் படேலும் கலக்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம். ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அசத்தினால் இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும். இந்த போட்டியில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய சூழலில் களமிறங்குகிறது. இந்திய அணி எஞ்சிய போட்டியில் ஜிம்பாப்வேயை மட்டுமே சந்திக்க உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசம் ஆகும்.  


இந்தியாவும், வங்காளதேசமும் டி20 போட்டிகளில் இதுவரை 11 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் 10 முறை இந்தியாவும், 1 முறை வங்காளதேசமும் வெற்றி பெற்றுள்ளன.


அதிகபட்சமாக இந்தியா 180 ரன்களையும், வங்காளதேசம் 166 ரன்களையும் விளாசியுள்ளனர். குறைந்தபட்சமாக வங்காளதேசம் 120 ரன்களையும், இந்தியா அதை எட்டிப்பிடித்து 122 ரன்களையும் எடுத்ததுமே குறைந்தபட்ச ரன்கள். டி20 உலககோப்பையில் இதுவரை ஆடிய 3 போட்டிகளிலுமே இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது. அதிகபட்சமாக ரோகித்சர்மா வங்காளதேசத்திற்கு எதிராக 452 ரன்களை விளாசியுள்ளார்.  

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.