கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சி பகுதியில் கிராம சபை கூட்டத்தில் வில்பட்டி பகுதியை கொடைக்கானல் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது. நகராட்சியுடன் இணைப்பதற்கு கிராம சபை கூட்டத்தில்  எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்




திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தாய் கிராமமாக இருந்து வருவது வில்பட்டி கிராமம். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்த வில்பட்டி மலை கிராமத்தில்  கிராம சபை கூட்டம் நடைபெற்றது, இந்த கூட்டமானது தலைவர் பாக்கியலட்சுமி ராமசந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இந்த கூட்டத்தில் மலை கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் குறித்து விவாதிக்கபட்டது.


வெள்ள நீரில் தரையிறங்கிய இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள்.!




குறிப்பாக வில்பட்டி ஊராட்சியை கொடைக்கானல் நகராட்சி உடன் இணைக்க உள்ளதாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியானது, இதனை தொடர்ந்து இந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவரும் கொடைக்கானல் நகராட்சியுடன் வில்பட்டி ஊராட்சியை இணைக்க கூடாது, இணைத்தால் தங்கள் விவசாயம் அழியும், வரிகள் உயரும் , அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும் என தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.


IAS Officers Transfer: துணை முதல்வர் தனிச்செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்; 12 ஐஏஎஸ் அதிகாரிகள் இட மாற்றம்- முழு லிஸ்ட்!




அதே போல இந்த வில்பட்டி ஊராட்சி பகுதிகளில் வசிக்க கூடிய பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் கலாச்சாரம் பாதிக்கப்படும் எனவும் அவர்களின் மண் சார்ந்த பழக்கவழக்கங்கள் மாற்றப்படும் நிலைமைக்கு வழி வகுக்ககூடும் என்பதால் வில்பட்டி ஊராட்சியை கொடைக்கானல் நகராட்சியுடன் சேர்க்க கூடாது  என தெரிவித்தனர். அதையும் மீறி நகராட்சியுடன் இணைத்தால் கொடைக்கானல் மூஞ்சிக்கல் பிரதான சாலையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் எனவும் எச்சரித்தனர். இதனைத் தொடர்ந்து கிராம சபை கூட்டத்தில் ஒரு மனதாக கொடைக்கானல் நகராட்சியுடன் வில்பட்டியை இணைக்க கூடாது என அனைவர் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, மேலும் வில்பட்டி ஊராட்சியை கொடைக்கானல் நகராட்சியுடன் இணைக்க கூடாது என கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.