புரட்டாசி அமாவாசை வழிபாடு
மாதந்தோறும் வரும் அமாவாசை காலங்களில் முன்னோர்களை நினைத்து பொதுமக்கள் வீடுகளிலேயே வழிபாடு நடத்துவது வழக்கம். ஆனால் ஆடி மற்றும் புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை நாட்களில் அருகில் உள்ள நீர்நிலைகளுக்கு சென்று எள்ளை நீரில் கரைத்து தர்ப்பணம் செய்வது வழக்கம். இதுபோன்ற காலங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் முன்னோர்களின் ஆசி முழுமையாக கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. எனவே ஆண்டுதோறும் நீர்நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் செய்வதை பொதுமக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் இந்த வருடம் புரட்டாசி மாதம் முதல் மஹாளயபட்ச அமாவாசை நாளில் புனித ஸ்தலங்களில் தங்களின் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்ய ஏராளமானோர் கூடினர்.
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் வழிபாடு
தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் குறிப்பாக நீர் நிலைகளில் கூடிய மக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் செய்தனர். போடியில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சிவபெருமானுக்கு ஆத்ம தீப பூஜை நடைபெற்றது. பக்தர்கள் இறந்த முன்னோர்களுக்கும்,தாய் தந்தையர்க்கும் ஆத்மா சாந்தியடைய ஆத்மா தீப பூஜை கலந்து கொண்டனர். பூஜைகள் பக்தர்கள் பூசணி, வாழை காய்கறிகள் ,வெள்ளம் ,பச்சரிசி, அகத்திக்கீரைகளை வாங்கி வந்து சிவபெருமானுக்கு முன் வைத்து பூஜை செய்த பின் தானம் செய்தனர். காசி, ராமேஸ்வரம், கொடுமுடி, சுருளி காசி விசுவநாதர் கோயில் ,வீரபாண்டி ஆகிய புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்ல முடியாதவர்கள் தங்களது முன்னோர்கள் ஆத்மா சாந்தி பெறவும் அவர்கள் ஆசீர் பெறவும் தர்ப்பபுல் கொண்டு பிரார்த்தனை செய்து ஆசீ பெற்றனர்.
அமைச்சர் பொன்முடியுடன் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் வாக்குவாதம் - கிராம சபை கூட்டத்தில் சலசலப்பு
சிவாலயத்தில் சிறப்பு வழிபாடு
குறிப்பாக மகளாயஅமாவாசையை முன்னிட்டு போடி அருகே வனப்பகுதியில் அமைந்துள்ள சிவாலயத்தில் சிறப்பு வழிபாடு செய்தனர்.
தமிழக கேரளாவை இணைக்கும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பிச்சாங்கரை என்ற அடர்ந்த வனப் பகுதியில் பாண்டிய மன்னர்கள் காலத்தில் சுமார் 800 ஆண்டுகளுக்கு பழமையான ஸ்ரீ கைலாய மேல சொக்கநாதர் , ஸ்ரீ கைலாய கீழ சொக்கநாதர் , கோவில் உள்ளன இவ் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி, அமாவாசை பிரதோஷம் சிவராத்திரி நாட்களில் சிறப்பு வழிபாடு சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம்.
புராட்டாசி மாகளாய அமாவாசையை முன்னிட்டு சிவாலயத்தில் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சிவனை வழிபட்டு சென்றனர். பக்தர்களுக்கு , பூ ,ருத்ராட்சம் உள்ளிட்டவைகள் பிரசாதமாக வழங்கப்பட்டன. மேலும் சிறப்பு அன்னதானம் நடைபெற்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து அன்னதானத்தில் கலந்து கொண்டு சென்றனர். தங்களின் முன்னோர்கள் நினைத்து ஆத்ம தீபத்தை ஏற்றி சிவனை வழிபட்டு சென்றனர்.