உயர் கல்வித்துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல உயர் கல்வித்துறை செயலாளராக கோபால் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டு உள்ளார். இதுபோல 12 ஐஏஎஸ் அதிகாரிகள் நிர்வாகக் காரணங்களுக்காக இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 


யார் யாருக்கு என்ன மாற்றம்?


உயர் கல்வித்துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கு பதிலாக உயர் கல்வித்துறை செயலாளராக கோபால் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் விலங்குகள், கால்நடை மற்றும் மீன்வளத் துறைச் செயலராக இருந்தவர்.


அதேபோல தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அதிகாரியாக இருந்த சத்யப்பிரதா சாஹூ, விலங்குகள், கால்நடை மற்றும் மீன்வளத் துறைச் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.



IAS Officers Transfer: துணை முதல்வர் தனிச்செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்; 12 ஐஏஎஸ் அதிகாரிகள் இட மாற்றம்- முழு லிஸ்ட்!


தொடர்ந்து மின்வாரியத் துறை செயலராக இருந்த ராஜேஷ் லக்கானி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மின்வாரியம், மின்சார உருவாக்கம் மற்றும் விநியோகத் துறை  செயலாளராக நந்தகுமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 


ராஷ்ட்ரிய உச்சாதார் சிக்‌ஷா அபியான் திட்டத்துக்கு ஸ்வர்னா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 


மனிதவள மேலாண்மைத் துறை செயலாளராக விஜயகுமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நீர்நிலை வளர்ச்சி முகமை செயலராக ஜெயகாந்தன் ஐஏஸ் பொறுப்பு வகிக்க உள்ளார்.


கல்லூரிக் கல்வி இயக்குநர் மாற்றம்


வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநராக இருந்த சுந்தரவல்லி, கல்லூரிக் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டு உள்ளார். அதேபோல சமூக நலத்துறை ஆணையராக இருந்த அமுதவள்ளி, தற்போது அரசு கைத்தறி, கைவினை, ஜவுளி மற்றும் கைத்தறித் துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.