ஒவ்வொருவரின் விருப்பத்திற்கேற்ப ஒவ்வொருவரும் வெவ்வேறு தொழில்கள் செய்து வருகின்றனர். அதில் பலர் தங்களது விருப்பத்திற்கு மாறாகவும் தொழில்கள் செய்து வருவதும் உண்டு. அதே நேரத்தில் செய்யும் தொழில்களில் ஆபத்து நிறைந்த சூழலிலும் மிகவும் சிரமமான தொழில்களிலும் பலர் ஈடுபடுகின்றனர். அப்படி வாகன ஓட்டிகளாக ஓட்டுநர் தொழில்களில் ஈடுபடுபவர்கள் பல்வேறு சிரமத்திற்கு மத்தியில் அந்த ஓட்டுநர் பணியை செய்து வருகின்றனர்.


Kamalhassan Not In Bigboss : பிக்பாஸ் தொகுத்து வழங்க முடியாது.. ஷாக் கொடுத்த கமல்.. என்னாச்சு..?




எதிர்பாராத விதமான விபத்துகள், இக்கட்டான சூழலில் வாகனத்தை இயக்கி வருவது, இயற்கை இடர்பாடுகளுக்கு மத்தியில் வாகனங்களை இயக்கி வருவது, வாடகை வாகனங்களில் வரும் பயணிகளை குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு  சேர்ப்பது என பல்வேறு சிரமத்திலும் ஓட்டுநர் பணிகளை விரும்பி செய்து வருகின்றனர்.


வாகன ஓட்டுநர்கள் அப்படி தாங்கள் செய்யும் தொழிலுக்கு மரியாதை செலுத்த வேண்டும். தங்களுக்கோ தங்களின் வாகனத்திற்கோ தங்களை நம்பி வரும் பயணிகளுக்கோ ஏதும் அசம்பாவிதம் நடந்து விடக்கூடாது என ஒவ்வொரு ஓட்டுநரும் தங்களது பயணத்தை தொடங்கும் முன்பு தாங்களுக்கு பிடித்த தெய்வங்களை வணங்கி வாகனத்தை இயக்க தொடங்குவார்கள்.


AIADMK: "எம்பி சீட்டு வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றிவிட்டார்” - " என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அவர் தான் காரணம்..!




திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே கணவாய்ப்பட்டி கணவாய் கருப்பணசாமி கோயிலில் வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் தங்களது வாகனங்கள் விபத்தில்லாமலும் லாபகரமாகவும் இயங்குவதற்கு வேண்டுதல் வைத்து ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் சிதறு தேங்காய் உடைத்து சிறப்பு பூஜைகள் செய்து கிடாய்கள் வெட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவது வழக்கம்.


இந்தாண்டு கோபால்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் வாடகை கார்கள் மற்றும்  சுற்றுலா வாகனங்கள்  வைத்திருப்போர் 50க்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் சுற்றுலா வாகனங்களுடன் கணவாய் கருப்பணசாமி கோவிலுக்கு வந்து வாகனங்களுக்கு மாலைகள் மற்றும் சந்தனம் பூசி கணவாய் கருப்பணசாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். 


Breaking News LIVE, AUG 6: மல்யுத்தம் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அரையிறுதிக்கு முன்னேற்றம்




தங்களது வாகனங்கள் விபத்தில்லாமலும், லாபகரமாகவும் இயங்க வேண்டி 5க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டி பொதுமக்களுக்கு கறி, முட்டையுடன் அன்னதானம் வழங்கினர். அன்னதான விழாவில் கோபால்பட்டி, கனவாய்ப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் இருந்து ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.