திண்டுக்கல் மாவட்டம், பழனி மற்றும் சுற்று வட்டார பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு பறிக்கப்படும் தக்காளி பழனியில் உள்ள தக்காளி மார்க்கெட்டில் வைத்து மொத்த விலைக்கு விற்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரலாறு காணாத வகையில் தக்காளி கிலோ ரூ.150 வரையில் விற்பனை செய்யப்பட்டது. இதனால் சாமானிய மக்கள் தக்காளியை வாங்கி பயன்படுத்தாத நிலைக்கு தள்ளப்பட்டனர். விலை ஏற்றத்தை பார்த்து இல்லத்தரசிகள் தக்காளியை வாங்கி பயன்படுத்த முடியாமல் விழி பிதுங்கி நின்றனர். விலை ஏற்றத்தை சமாளிக்க அரசு கூட்டுறவுத்துறை சார்பில் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


BAN Vs PAK Innings Highlights: வேகத்தால் வங்காள தேசத்தை சிதைத்த பாகிஸ்தான் வெற்றி பெற 194 ரன்கள் இலக்கு..!




அதனை வாங்குவதற்கு பொதுமக்கள் வரிசையில் காத்திருந்தனர். பொதுமக்களின் தேவையை கருதி திண்டுக்கல் உள்ளிட்ட சில இடங்களில் வியாபாரிகள் அதிரடி தள்ளுபடி விலையில் தக்காளியை விற்பனை செய்தனர். அதன்பின்னர் தக்காளி வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. இதனால் விலை குறைந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனி பகுதியில் வரத்து அதிகரித்ததால் விலை சரிந்தது. இதனால் கிலோ ரூ.20-க்கு விற்கப்பட்டது. இந்தநிலையில்  பழனி மார்க்கெட்டில் தக்காளி வரத்து மேலும் அதிகரித்தது. இதனால் விலை வீழ்ச்சி அடைந்து 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனை ஆனது.


Sanatan Dharma Row: சனாதன விவகாரத்தை கையில் எடுத்த பிரதமர் மோடி.. உதயநிதிக்கு மேலும் நெருக்கடி.. நடந்தது என்ன?




ஒரு கிலோ தக்காளி மொத்த மார்க்கெட்டில் அதிகபட்சமாக ரூ.10 முதல் ரூ.12-க்கு ஏலம் போனது. இதை வாங்கிச் செல்லும் வியாபாரிகள் வெளிமார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்கின்றனர். கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.120 வரை விற்ற நிலையில், தற்போது ரூ.10-க்கு மட்டுமே விற்பனையாவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தேவை குறைவாக இருப்பதால் வியாபாரிகள் மொத்த மார்க்கெட்டில் இருந்து குறைந்த அளவு தக்காளி வாங்கி செல்கின்றனர்.


அமைச்சர் உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி! சாமியாரா..? கிரிமினலா..? யார் இந்த ’மிரட்டல்’ பரமஹம்ஸா?




எனவே விற்பனை ஆகாத தக்காளியை விவசாயிகள் குப்பையில் கொட்டிச் செல்கின்றனர். கீழே கொட்டப்படும் தக்காளிகள் சாலையோர விலங்கினங்களுக்கு தற்போது தீவனமாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,” அனைத்து பகுதிகளில் இருந்தும் தக்காளி வரத்து ஆவதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. தக்காளி பயிரிட்டவர்களுக்கு பறிப்பு கூலி, போக்குவரத்து செலவுக்கு கூட லாபம் கிடைப்பதில்லை. பறிக்காமல் விட்டால் செடிகள் பாதிப்படையும் என்பதால் கிடைக்கும் விலைக்கு விற்று வருகிறோம்” என்கின்றனர்.