மகா விஷ்ணுவின் 10 அவதாரங்களில் மிக முக்கியமான அவதாரம் கிருஷ்ண அவதாரம். ஆயர்குலத்தில் கண்ணனாக வளர்ந்த கிருஷ்ணர் செய்த லீலைகளும், அவர் நடத்திய திருவிளையாடல்களும் ஏராளம் என நம்பப்படுகிறது. அப்பேற்பட்ட கிருஷ்ணர் ஆவணி மாதத்தில் பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தி என்று அழைக்கப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி என்றும் கோகுலஷ்டமி நேற்று செப்டம்பர் மாதம் 6-ந் தேதி கொண்டாடப்பட்டது.




வட இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி தமிழ்நாட்டிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மதுரை பழங்காநத்தம் பகுதியில்  கிருஷ்ணர் வீதி உலா மற்றும் உறியடிக்கும் நிகழ்ச்சி வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விளையாட்டுப் போட்டிகளை உற்சாகமாக கண்டுகளித்தனர்.







 

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மதுரை மாவட்டம் முழுவதும் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதன்படி நேற்று மதுரை பழங்காநத்தம் தெற்குதெரு பகுதியில் உள்ள கிருஷ்ணர் அனைத்து பகுதிகளிலும் வீதி உலா வந்ததோடு பொதுமக்களுக்கு அருள் பாலித்தார்.

 



அதன் பின்பு விழா குழு  சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது அதன் ஒரு பகுதியாக உறியடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கிருஷ்ணர் வேடமணிந்தவர்கள் உயரமாக தொங்கவிடப்பட்ட  ஐந்து சிறிய மண்பானைகளை உடைத்தார். பானைகளை உடைக்க முயன்றபோது தண்ணீரை பீய்ச்சி அடித்த நிலையில் சவாலுடன் பானைகளை உடைத்தனர். அதில் கிருஷ்ணருக்கு பிடித்த நெய் வெண்ணெய் தயிர் பால் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இருந்தது பின்பு வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஐந்து பேர் கொண்ட குழு வழுக்கு மரத்தின் மேலே கட்டப்பட்டுள்ள ஆயிரம் ரூபாயை எடுத்து வெற்றி கண்டனர். இதனை தொடர்ந்து கிருஷ்ணரை ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.