மதுரையில் பெண்களின் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் ஆபாசமாக பதிவிட்ட திருப்பூரை சேர்ந்த நபர் கைது. இது போன்ற சமூகவலைதளங்களில் பதிவிடுபவர்களை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை.


இணைய வசதிகளை பயன்படுத்தி பல்வேறு நல்ல விடயங்களை செய்யமுடிகிறது. மூலை முடுக்கில் இருக்கும் கிராமங்களைக் கூட நேரடியாக இணைக்கிறது. ஆனால் இணைய வசதிகளை சிலர் தவறான முறையில் பயன்படுத்தி கடைசியில் காவல்துறையில் சிக்கிக் கொள்கின்றனர். இந்நிலையில் மதுரையில் பெண்களின் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் ஆபாசமாக பதிவிட்ட திருப்பூரை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


'X' தளத்திலும் மற்றும் Telegram-லும் பதிவு


மதுரை மாவட்ட சரக காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் ”அவரின் குடும்பத்தில் உள்ள பெண்களின் புகைப்படங்களை தவறாக பயன்படுத்தி ஆபாசமாகவும் அருவறுக்கத்தக்க வகையிலும் சமூக வலைதளங்களான 'X' தளத்திலும் மற்றும் Telegram-லும் பதிவிட்டுள்ளதாக அளித்த புகாரின் கீழ் மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த புகார் தொடர்பாக குற்றவாளியை கண்டுபிடிக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.


- "இந்த முறை திருவள்ளுவரும் கசந்துவிட்டார் போல" - மத்திய அரசை விளாசித் தள்ளிய மு.க.ஸ்டாலின்!


மேற்படி குற்றச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ததில் பெண்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் புகைப்படங்களை திருடி அதில் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாகவும் அருவறுக்கத்தக்க வகையிலும் சமூக வலைதளங்களான 'X' தளத்திலும் மற்றும் Telegram-லும் பதிவிட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஆபாச பதிவை பதிவு செய்த நபர் திருப்பூர் மாவட்டம் ஆத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த சூர்யா என்ற இளைஞர் என்பது தெரியவந்தது.


இதனையடுத்து திருப்பூருக்கு விரைந்து சென்ற தனிப்படை காவல்துறையினர் அவனை கைது செய்து அவனிடமிருந்து செல்போன், சிம்கார்டுகள் மற்றும் இன்டர்நெட்க்கு பயன்படுத்திய மோடம் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர்.


புகாரின் அடிப்படையில் விரைவாக செயல்பட்ட சைபர் கிரைம் மற்றும் தனிப்படை காவல்துறையினருக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.


மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Mamata Banerjee: நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற மம்தா வெளிநடப்பு: திடீர் திருப்பம்; என்ன நடந்தது?


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - NITI Aayog: நிதி ஆயோக் கூட்டம்: இந்தியா கூட்டணி முதல்வர்கள் புறக்கணிப்பு; மம்தா பங்கேற்றது எதனால்?