வழிப்பறி மற்றும் கொலை சம்பவங்களுக்காக வாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 8 இளைஞர்கள் 2 நாட்களில் காவல் துறையினரால் கைது - பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
பதட்டத்தில் மதுரை மாநகர்
மதுரை மாநகர் பகுதியில் அவனியாபுரம், அனுப்பானடி, உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்றது. இந்தநிலையில், மதுரை மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதன் உத்தரவின் பேரில் மாநகர காவல்துறையினர் பல்வேறு பகுதிகளிலும் தீவிர ரோந்து ஈடுபட்டனர். கடந்த 2 நாட்கள் மேற்கொண்ட 24 மணி நேர தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன தணிக்கையின் போது மதுரை மாநகர காவல் ஆணைய எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தி வழிப்பறி செய்யும் நோக்கத்திலும் மற்றும் பழிவாங்கும் கொலை சம்பவத்திற்காக பயன்படுத்துவதற்காக வாள் மற்றும் கத்தியுடன் சுற்றித் திரிந்தது தெரியவந்துள்ளது.
வாள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட ஆயுதங்கள்
இதனையடுத்து வாள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட ஆயுதங்களுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடமாடியதாக மதுரை வில்லாபுரம் தட்சணா மூர்த்தி (32), சோலை அழகுபுரம் கண்ணன் (28), சம்மட்டிபுரம் ராம்குமார் (35), பேச்சியம்மன் படித்துறை சந்தோஷ் (22), ஆழ்வார்புரம் மீனாட்சி சுந்தரம் (24), அருள்தாஸ்புரம் தீர்வீன் (20) , அனுப்பானடி வினோத்குமார் (26), கே - புதூர் ராஜ் (24) ஆகிய 8 பேரை தெற்குவாசல், ஜெய்ஹிந்த்புரம், எஸ்.எஸ்.காலனி, திலகர் திடல், செல்லூர்,மதிச்சியம் , திடீர்நகர், தெப்பக்குளம் ஆகிய காவல்நிலையங்களை சேர்ந்த காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பின்னர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு அவர்கள் வைத்திருந்த வாள், அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களையும், செல்போன் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்த காவல்துறையினர் கைது செய்யப்பட்ட 8 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். மதுரை மாநகரில் இரண்டு நாட்களில் காவல் துறையினரின் நடத்திய தீவிர ரோந்து பணியின் போது 8 இளைஞர்கள் வாள் மற்றும் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - இதுதான் முதலமைச்சரை நடத்தும் விதமா? எதிர்க்கட்சிகளை எதிரிகளாக நடத்தாதீர்கள்!- முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - INDvsSL: பயிற்சியாளராக வெற்றியுடன் தொடங்குவாரா கம்பீர்? இந்தியா - இலங்கை இன்று மோதல்!