நெல்லை சவேரியார் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து தாங்கள் படித்த பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்ட 10 லட்ச ரூபாய் நிதி வழங்கிய சம்பவம் அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Continues below advertisement


Bigg Boss Thamarai Salary: பிக்பாஸ் அல்டிமேட்டுக்காக தாமரை வாங்கிய சம்பளம் என்ன தெரியுமா..?




தென்னகத்தில் ஆக்ஸ்போர்டு என அழைக்கப்படும் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. 1880ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நூத்தி நாற்பத்தி இரண்டு ஆண்டுகள் பாரம்பரியமிக்க பள்ளியாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயின்று பல்வேறு மாணவர்கள் பல பொறுப்புகளில் சிறந்த ஆளுமைகளாகவும் இருந்து வருகின்றனர் சிறப்புமிக்க இப்பள்ளியில் 1991-96 ஆம் ஆண்டு வரை பயின்ற மாணவர்கள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி மற்றும் வெள்ளி விழா சந்திப்பு நிகழ்ச்சி ஆகியவை பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது. இந்த பருவத்தில் பயின்ற சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.


Actor Vivek: கருத்து கந்தசாமியாக கலக்கிய நடிகர் விவேக்கின் அசத்தல் டயலாக்ஸ்...!




"ஐஸ்வர்யா ராய்க்கு இவன் ஹீரோவா என்று கேட்டார்" - ரஜினி ஜாலியாக பகிர்ந்த இன்சல்ட் மொமெண்ட்!


மேலும் அந்த பருவத்தில் மாணவர்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் முன்னாள் பள்ளி மாணவர்களின் குழந்தைகளுக்கான நடன நிகழ்ச்சி விளையாட்டு போட்டிகள் உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக பள்ளி முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டுவதற்கும் பள்ளியை மேம்படுத்துவதற்குமான்நிதி ரூபாய் 10 லட்சத்தை பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் பள்ளியின் தாளாளர் இடம் ஒப்படைத்தனர். முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து தாங்கள் படித்த பள்ளியின் மேம்பாட்டிற்காக பெருந்தொகை வழங்கியிருப்பது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Cobra Second Single: அதீரா அதீரா.. உன் ரூபம் பலநூறா.. மிரட்டும் ஏ.ஆர்.ரஹ்மான்.. வெளியானது கோப்ரா இராண்டாவது சிங்கள் ப்ரோமோ..!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண