ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் கோப்ரா படத்தின் 2வது சிங்கிள் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. 


நடிகர் விக்ரம் இன்று தனது 56 ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு இவரது நடிப்பில் வருகிற மே 26 ஆம் தேதி வெளியாக இருக்கும் கோப்ரா படத்தின் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது.


 






மேலும் விக்ரமின் பிறந்தநாள் பரிசாக, ஒரு முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி தற்போது, படத்தின் 2வது சிங்கிள் பாடலான அதீராவின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அத்துடன் இந்தப்பாடல் வருகிற 22 ஆம் தேதி வெளியாகும் எனவும்  தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 


 



ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப்படத்தில் இருந்து முன்னதாக போஸ்டர், டீஸர் உள்ளிட்டவற்றுடன் தும்பி துள்ளல் பாடலும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.


 



இந்த நிலையில் தற்போது இந்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கி இருக்கும் இந்தப்படத்தில் விக்ரமுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஆகியோருடன் கிரிக்கெட் வீரரான இர்ஃபான் பதானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண