சிவகங்கை ஆதம் பள்ளிவாசலில் இஸ்ஸாமிய சகோதரா்களுடன் இரமலான் நோன்பு துறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் ப.சிதம்பரம் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் மோடியை பற்றி இளையராஜா பேசியது அவரது சொந்த கருந்தாக எடுத்துக்கொண்டாலும், மேதையோடு மோடியை ஒப்பிடுவது மேதைக்கு நல்லதல்ல என்றார்.





மேலும் “தமிழகத்தின் நிதி நிலைமை நல்ல நிலையில் இல்லை. வெள்ளை அறிக்கையே அதனை உறுதிபடுத்துகிறது. தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு முன் பொருளாதார நிலைமையை சீர்தூக்கி பார்த்து முடிவு செய்ய வேண்டும். பிராசாந்த் கிஷோர் மிகப்பெரும் திறமைசாலி. அவரிடம் டேட்டாவுடன் பல விபரங்கள் உள்ளது. பிரசாந்த் கிஷோரின் யோசனைகளை அமல்படுத்தினால் காங்கிரஸ் கட்சிக்கு பயனுள்ளதாக இருக்கும்.

 




 

கச்சதீவை தாரை வார்த்தது முடிந்து போன விஷயம். தற்போது இலங்கை உள்ள நிலையில் கச்சதீவை திரும்ப பெற சாத்தியம் உண்டா என தெரியவில்லை. உலக நாடுகள், இந்தியாவின் உதவியின்றி இலங்கை மீண்டு வர முடியாது. இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து காப்பாற்ற இந்தியா உதவ வேண்டும். ஆனால் அந்த உதவி நம்முடைய மேற்பார்வையில் இருக்க வேண்டும். உதவி செய்யும் போது நம் நாட்டின் ஆலோசனைக் குழுவின் அறிவுறுத்தலின்படி செயல்பட்டால் முறையாக பயன்படும். அப்படியான கண்டிஷன் உதவிகளைத்தான் நம் நாட்டு அரசு செய்யவேண்டும்.

 

ஆனால் இது குறித்து என்ன முடிவு செய்யப்போகிறார்கள் என தெரியவில்லை. அ.தி.மு.க வாக்கு வங்கி உள்ள அரசியல் கட்சிதான். ஆனால் எதிர்கட்சியாக செயல்பட திறமையில்லாத தலைமையால் அவர்கள் தவிக்கிறது” என்றார்.