வத்தலகுண்டு அருகே தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் நள்ளிரவில் நடந்த விநோத திருவிழா நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ளது அழகாபுரி கிராமம் இந்த கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகாலட்சுமி கோவில் ஆடி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. பாரம்பரிய வழக்கப்படி நள்ளிரவில் நடக்கும் இந்த திருவிழாவில் முதல் நிகழ்வாக அம்மன் கரகம் அலங்கரிக்கப்பட்ட பூ பல்லக்கில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இந்த ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்று முளைப்பாரி எடுத்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து திருவிழாவில் முக்கிய நிகழ்வான தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கிராமத்தில் அமைந்துள்ள கங்கை கிணற்றின் அருகே வரிசையாக அமர்ந்திருந்த பக்தர்களின் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. இந்த விநோத திருவிழாவில் திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
முட்புதரில் கிடந்த சூட்கேஸ்... பரபரப்பான திண்டிவனம்... காத்திருந்த டுவிஸ்ட்....
இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று ஆடி அமாவாசை தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு தங்களது சொந்த கிராமங்கள் மற்றும் பழமையான கோயில்களில் கூடி தர்ப்பணம் கொடுத்தும் வழிபாடு செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ராமேஸ்வரத்திற்கு அடுத்தபடியாக
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகில் வைகைக் கரையோரம் அமைந்துள்ள அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலில் ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுப்பது சிறப்பு வாய்ந்ததாக கருதப்பட்டு வருகிறது. இன்று ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு இந்த கோயிலில் மாவட்டத்திலும் பல்வேறு ஊர்களில் இருந்தும் பிற மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தும், சூரிய பகவானை வழிபட்டும் வருகின்றனர்.
Breaking News LIVE, AUG 4: ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு கொலை மிரட்டல் - கடிதத்தில் வந்த ஷாக் நியூஸ்
மேலும் இங்கு அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றி முன்னோர்களை வழிபட்டு வருகின்றனர். இந்த ஆடி அமாவாசை திருநாளை முன்னிட்டு வத்தலகுண்டு அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நிலக்கோட்டை டி.எஸ்.பி செந்தில்குமார் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மோட்ச தீபம் ஏற்றி மூலவரை வழிபாடு செய்தனர்.