ஆகஸ்ட் 4 ஆம் தேதி அதாவது இந்த மாதத்தின் முதல் ஞாயிற்று கிழமை தேசிய சகோதரி தினம் கொண்டாடப்படுகிறது. இந்தச் சந்தர்ப்பம் சகோதரிகளுக்கு இடையேயான பந்தத்தைக் கொண்டாடுவதற்கும், நல்ல நேரங்களிலும் கெட்ட நேரங்களிலும் அவர்களுக்குத் துணையாக நின்ற சகோதர சகோதரிகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும் கொண்டாடப்படுகிறது. 


சகோதரிகளிடையே நாம் எவ்வளவுதான் சண்டை போட்டாலும் வாக்குவாதங்களிலும் ஈடுபட்டாலும் அவர்களிடையே உருவான பந்தம் சற்றும் மாறாது. ரத்த பந்தந்தில் மட்டுமே இந்த உண்ணத உணர்வு ஏற்படும் என்றில்லை. யார் என்றே தெரியாத எத்தனையோ பேர் இந்த சகோதர உறவுக்குள் நிலைத்து நிற்கின்றனர் என்றால் அது மிகையல்ல. 


சகோதரியாக ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்காகவும் இந்த நாளை சமர்ப்பியுங்கள். தேசிய சகோதரி தினம் என்பது சகோதரிகள் நம் வாழ்வில் கொண்டு வரும் அன்பு, தோழமை மற்றும் ஆதரவை அங்கீகரிக்க ஒரு வாய்ப்பு. இந்த நாளில் தனிநபர்கள் தங்கள் சகோதரிகளுக்கு அன்பையும் மரியாதையையும் காட்டவும், தங்கள் சகோதரிகளுடன் தங்கள் உறவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.


இந்த நாள் சகோதரிகளுடன் ஒன்றாக நேரத்தை செலவிட உதவுகிறது. அவர்களின் உறவை வலுப்படுத்த உதவுகிறது. இந்த நாள் அன்பு, ஆதரவு, ஒற்றுமை கூட்டுகிறது. சொந்தத்தின் அருமையையும் ஆரோக்கியத்தையும் உணர்த்துகிறது. 


மேலும் சின்ன விஷயமானாலும் சரி பெரிய விஷயமானாலும் சரி எப்படி ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளலாம் என பகிர்ந்து கொள்ள சரியான வாய்ப்பாக இந்த நாள் அமைகிறது. சகோதரிகளுடன் பழைய நினைவுகள், மகிழ்வூட்டும் தருணங்களை நினைவு கூர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தலாம். 


சகோதரிகள் தினத்தை எப்படியெல்லாம் கொண்டாடலாம்?


தேசிய சகோதரிகள் தினத்தில் உங்கள் சகோதரிகளுடன் தொடர்பு கொள்வது ரொம்ப முக்கியம். அவர்களுடன் நேரத்தை செலவிடுவதும் முக்கியம். வேலையில் மாட்டிக் கொண்டால் வீடியோ கால் செய்யலாம். ஒரு வாழ்த்து அட்டையை அனுப்புவதன் மூலம் நீங்கள் அவர்களை எவ்வளவு மதிக்கிறீர்கள் என்பதை அவர்களிடம் சொல்லுங்கள். இந்தச் சின்னச் சின்ன செயல்கள்தான் சகோதரத்துவத்தை வலுவாக வைத்திருக்கின்றன.



உங்களுக்கு உடன் பிறந்த சகோதரிகள் இல்லையென்றால், உங்கள் நெருங்கிய பெண் நண்பர்களை உங்கள் சொந்த சகோதரிகளாக நினைத்துப் பாருங்கள். மதிய உணவு அல்லது இரவு உணவிற்கான நேரத்தை அவர்களுடன் செலவழியுங்கள். மகிழ்ச்சியாக இருங்கள். ஒருவருக்கொருவர் தங்களுடைய சாதனைகள் மற்றும் பின்னடைவுகளைப் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள். தேவைப்படும்போது ஒருவருக்கொருவர் ஆதரவாய் இருங்கள். 


இந்த நாள் ஒரு சாகசத்திற்கு ஏற்றதாக இருக்கலாம். ஒரு பயணத்தை மேற்கொள்ளுங்கள். நீங்கள் இதுவரை செய்யாத ஒன்றை முயற்சிக்கவும்.


உங்கள் உடன் பிறந்த பிறக்காத சகோதரிக்களுக்கு அனுப்ப சில வாழ்த்து செய்திகள் இதோ!


“நீ என் சகோதரி மட்டுமல்ல.... என் நெருங்கிய தோழி. சகோதரிகள் தின வாழ்த்துகள்!”


”நான் இதை அடிக்கடி சொல்லாமல் இருக்கலாம்; ஆனால் நான் உன்னை எப்போது விரும்புகிறேன். சகோதரிகள் தின வாழ்த்துகள்”


”எப்போதும் எனக்காக நிற்கும் என் சகோதரிக்கு நன்றி. உங்களுக்கு அருமையான சகோதரி தின வாழ்த்துக்கள்!” 


“நீ இன்று வெகு தொலைவில் இருக்கலாம். ஆனால் என்றும் என் இதயத்துக்கு நெருக்கமாய் இருக்கிறாய். லவ் யூ சகோதரி!” 


“உலகின் சிறந்த சகோதரிக்கு சகோதரிகள் தின வாழ்த்துகள்!”


”நீ என்னுடைய சகோதரிமட்டுமல்ல; என்னுடைய நம்பிக்கை! சகோதரிகள் தின வாழ்த்துகள்!”


“என் இதயத்தையும் வாழ்க்கையையும் பிரகாசிக்க வைத்த சகோதரிக்கு சகோதரிகள் தின வாழ்த்துகள்!”


“உன்னை முடிவில்லாமல் நேசிக்கிறேன் முட்டால் தங்கையே! சகோதரிகள் தின வாழ்த்துகள்”