Breaking News LIVE, AUG 4: சீமான் மீது வழக்குப்பதிவு!
Breaking News LIVE, August 4: உள்ளூர் தொடங்கி உலக நிகழ்வுகள் வரையிலான, முக்கிய நிகழ்வுகளை பற்றி உடனடியாக அறிய ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்து இருங்கள்.
சீமான் மீது வழக்குப் பதிவு!
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று அனுமதியே பெறாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 300 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கலைஞர் கருணாநிதி நினைவு நாள் அமைதி பேரணியில் அணி திரள்வோம் என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி , சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கலைஞர் சிலை அருகிலிருந்து பேரணி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 34 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Breaking News LIVE, AUG 4: இரவு 10 மணிவரை 34 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், மதுரை , தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நீலகிரி, கோவை, திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், நெல்லை, குமரி ஆகிய 34 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வயநாடு நிலச்சரிவில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்குத் தேவையான பொருட்களை அனுப்பி வைத்த கோவையைச் சேர்ந்த ஜீவ சாந்தி அறக்கட்டளையினர். தமிழ்நாடு அரசின் சிறுபான்மை நல ஆணைய உறுப்பினர் முகம்மது ரபி, கொடி அசைத்து அனுப்பி வைத்தார்.
தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, இணை இயக்குநர்கள் , ஆர்.டி.எம்.ஏ , மாநகராட்சி துணை ஆணையர்கள் 25 பேர் மாற்றம்!
உத்தரப் பிரதேசம்: டெல்லி - சஹாரன்பூர் இடையேயான MEMU ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், விரைவில் சரிசெய்யப்பட்டு ரயில் இயக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த 3 மணி நேரத்தில் 29 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் அல்லு அர்ஜுன் ₹25 லட்சம் நிதி உதவி
விஜய் ஆண்டனியை வைத்து தான் இயக்கிய 'மழை பிடிக்காத மனிதன்' படத்தில் இருந்து 1 நிமிட காட்சி நீக்கப்படுவதாக இயக்கநர் விஜய் மில்டன் மகிழ்ச்சி கடந்த 2ம் தேதி வெளியான இப்படத்தில் தனக்கே தெரியாமல் சில காட்சி இடம்பெற்றதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழக தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக டிஜிபி சைலேஷ்குமார் யாதவ் நியமனம்
ஐபிஎஸ் அதிகாரி ரூபேஷ்குமார் மீனா, நெல்லை மாநகர காவல் ஆணையராக நியமனம்
விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த விரைவு ரயிலில் திடீரென தீப்பிடித்தது. இதில் பி6, பி7, எம்.1 ஆகிய கோச்களில் தீ பிடித்து எரிந்த்து. தீயணைப்புத்துறையினர் நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு தீயை அணைத்தனர்.
சென்னையில் தாழ்தள பேருந்து சேவையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 88 புதிய பேருந்துகள், 12 பழைய புதுப்பிக்கப்பட்ட பேருந்து என மொத்தம் 100 பேருந்துகள் இன்று இயக்கப்பட்டுள்ளன.
சென்னையில் முக்கிய வழித்தடங்களில் இந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிகழ்வில் அமைச்சர்கள் சிவசங்கர், சேகர்பாபு, மேயர் பிரியா, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நெல்லை மாநகராட்சி மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில், திமுக சார்பில் ராமகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கிட்டு எனும் ராமகிருஷ்ணன், நெல்லை மாநகராட்சியின் 3வது வார்ட் கவுன்சிலராக உள்ளார். முன்னதாக அந்த பதவியை வகித்து வந்த சரவணன் கடந்த மாதம் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய மேயருக்கான மறைமுக தேர்தல் நாளை நடைபெற உள்லது
ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது. சதீஷ் என்ற பெயரில் வந்த கடிதத்தில் குழந்தையை கடத்தி விடுவதுடன் கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்க் படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் போலீசாரிடம் சரண்டைந்துள்ள நிலையில் இதன் பின்னணியில் இருப்பவர்களை கண்டு பிடித்து கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் இந்த கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக விவசாய அணி அமைப்பாளர் சுந்தரபாண்டியன் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் சுந்தரபாண்டியன் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இருச்சக்கர வாகனத்தில் சென்ற நவாஸ்கானை 5 பேர் கொண்ட கும்பல் கத்தியால் வெட்டிவிட்டு ரூ. 50 லட்சம் பணத்தை பறித்துச் சென்றது. நவாஸ்கான் அளித்த புகாரையடுத்து வடக்கு கடற்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
கத்தியால் தாக்கியதில் காயமடைந்த நவாஸ்கான் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2913 கன அடியில் இருந்து 3,934 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையிலிருந்து குடிநீர், கால்வாய் பாசனத்திற்காக விநாடிக்கு 1055 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 105 அடி உயரம் கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 94.68 அடியாக உயர்ந்துள்ளது.
கேரள மாநிலத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதாவது காசர்கோடு, கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு, இடுக்கி, கோட்டயம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு 250க்கும் மேற்பட்டோரு உயிரிழந்துள்ளனர். மீட்பு பணி 6வது நாளாக இன்னும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மீண்டும் கனமழை வாய்ப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வயநாடு பகுதியில் கடந்த 30ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல கிராமங்கள் மண்ணோடு மண்ணாக போகின. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 257ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 6வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இதனால் மேலும் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
Background
- கடைமடை மாவட்டமான மயிலாடுதுறைக்கு சென்றது காவிரி நீர் - சிறப்பு பூஜைகள் செய்து மலர் தூவி வரவேற்ற அதிகாரிகள்
- நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 4 புதுக்கோட்டை மீனவர்கள் கைது - தமிழ்நாடு மீனவர்களுக்கு எதிராஅக் தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்
- வய்நாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் 24 பேர் தமிழர்கள் - காணாமல் போன மேலும் 25 பேரை தேடும் பணி தீவிரம்
- சென்னை வில்லிவாக்கத்தில் இருந்து காட்பாடி வர வெற்றிகரமாக நடைபெற்ற வந்தே மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் - வேகம் மற்றும் சிக்னல் தொழில்நுட்பம் குறித்து ஆய்வு
- ஆடி அமாவாசை தினத்தை ஒட்டி, குற்றாலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். அருவியில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு
- சென்னையில் சட்ட விதிகளுக்கு மாறாக வெளிநபர்களை மது அருந்த அனுமதித்தல், மதுபானங்களை விநியோகம் செய்தல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட 5 தனியார் நட்சத்திர ஹோட்டல்களுக்கு சீல் வைத்து மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
- கேரள வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350-ஐ கடந்தது - 6வது நாளாஅக் தொடரும் மீட்பு பணி
- இமாச்சல பிரதேசத்தில் மேகவெடிப்பு காரணமாக கொட்டி தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 9 பேர் பலி - காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம்
- பாரிஸ் செல்ல பஞ்சாப் முதலமைச்சருக்கு அனுமதி மறுப்பு - ஒலிம்பி போட்டிகளை காண திட்டமிட்டிருந்த பகவந்த் மான்
- காஷ்மீரில் தேசவிரோத செயலில் ஈடுபட்ட 5 போலீசார் உட்பட 6 பேர் பணி நீக்கம்
- இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது
- பாரிஸ் ஒலிம்பிக் - பேட்மிண்டன் ஆடவர் தனிநபர் பிரிவின் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர் லக்ஷயா சென் இன்று களமிறங்குகிறார்
- பாரிஸ் ஒலிம்பிக்: ஆடவர் ஹாக்கி காலிறுதி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி இன்று களம் காண்கிறது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -