விழுப்புரம் : திண்டிவனம் அருகே விவசாய நிலம் அருகே முட்புதரில் கிடந்த மர்ம சூட்கேசால் பரபரப்பு . விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஆசூர் கிராமத்தில் விவசாய நிலம் அருகே முட்புதரில் சூட்கேஸ் ஒன்று பொதுமக்கள் பார்வைக்கு தெரியும்படி கீழே கடந்துள்ளது.


துர்நாற்றம் வீசிய சூட்கேஸ் ?


மேலும் அந்த சூட்கேஸ் இருந்த இடத்தில் துர்நாற்றம் வீசியுள்ளது, இந்த நிலையில் அந்த வழியாகச் சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகள் துர்நாற்றம் வீசியதைக் கண்டு வாகனத்தை நிறுத்தி பார்த்த போது சூட்கேஸ் ஒன்று முப்பது இருப்பதை கண்டனர்.


இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் வெள்ளிமேடுபேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் புதரில் கிடந்த சூட்கேசை திறந்து பார்த்தனர்.


சூட்கேஸில் இருந்தது என்ன ?


அதில் ஆண் மற்றும் பெண்களுக்கான ஆடைகள் இருந்தது. அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த போலீசார் முட்புதரில் தீவிரமாக தேடினர். அப்போது பாம்பு ஒன்று இறந்து நிலையில் கிடந்தது. இதன் காரணமாக தான் துர்நாற்றம் வீசியது என தெரிய வந்த பின்னரே போலீசார் நிம்மதி பெரும் மூச்சு விட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.