தேனி மாவட்டம் கம்பம் நகர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட  கோம்பை ரோடு பகுதியைச் சேர்ந்த இளையந்திரன் சுரேஷ் மற்றும் வனராஜ் என்பவரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 33 கிலோ கஞ்சாவினை கைப்பற்றி தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.அப்போது அவர்கள் விசாரணையில் கஞ்சாவினை ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அனக்காபள்ளி என்னும் இடத்தில் விலைக்கு வாங்கி வந்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.


“என்னை சகோதரியாகத்தானே பார்த்திருக்கணும்.. பொறாமைப்படுறீங்களே?” விஜய் மாநாட்டு தொகுப்பாளர் கவிபாரதி துர்கா பதிலடி..




இது தொடர்பாக சிறப்பு  தனிப்படை அமைத்து ஆந்திர மாநிலத்திற்கு சென்ற தேனி மாவட்ட போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளியான லவராஜு என்ற ஞானி என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 26 கிலோ மதிப்புள்ள கஞ்சாவினையும் பறிமுதல் செய்துள்ளனர்.  மேலும் அவரை ஆந்திர மாநிலத்தில் இருந்து தேனி மாவட்டம் கம்பம் வடக்கு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 


New Rule From 1st Nov: நவ.1 முதல் அமலாகும் புதிய மாற்றங்கள் - கிரெடிட் கார்ட் தொடங்கி ஐஆர்சிடிசி விதி வரை




இதுகுறித்து உத்தமபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கோட்டு வேலவன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது இதுவரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தி தேனி மாவட்டத்திற்கு ஆந்திராவில் இருந்து கஞ்சா விற்பனை செய்த மொத்த வியாபாரிகள் மூன்று பேரை கைது செய்துள்ளதாக தகவல் தெரிவித்தார்.தேனி மாவட்டத்திற்கு ஆந்திரா மாநிலத்தில் இருந்து  கஞ்சா விற்பனை செய்த குற்றவாளியை போலீசார் கைது செய்த சம்பவம் சமூக ஆர்வலர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.


Watch Video: திடீரென அந்தரத்தில் பறந்த பிஎம்டபள்யூ கார், டிரக் - சாலையில் நடந்தது என்ன? வீடியோ வைரல்


இதேபோல் தேனி மாவட்டம் கூடலூரில், கஞ்சா எண்ணெய் தயாரித்து விற்பனை செய்ய முயன்ற 3 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா எண்ணெய்யை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரளாவிற்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கஞ்சாவினால் தயார் செய்யப்பட்ட எண்ணெயை விற்பனை செய்யப்படுவதாக கூடலூர் வடக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் அடிப்படையில், போலீஸார் ரோந்து சென்றனர்.




குமுளி செல்லும் கேரள நெடுஞ்சாலையில் போலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சந்தேகப்படும் படியாக டூவிலரில் வந்த 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் ஒரு கிலோ எடை கொண்ட கஞ்சா எண்ணெய்யை விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றது தெரிய வந்துள்ளது.